
ஃபிஃபா உலக கோப்பையை கைப்பற்றப் போவது யார்?
22- வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியானது கடந்த மாதம் 22- ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. போட்டியானது கார்தாரரில் தொடங்கப்பட்டது. போட்டியில் மொத்தமாக 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.இந்த போட்டியில் சாம்பியன் யார்? என தீர்மானிக்கும் இறுதி போட்டியானது இன்று இரவு தொகாவின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும். இறுதி போட்டியானது இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், அர்ஜென்டினாயுடனான பலபரிச்சை நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிரான்ஸ் அணியானது 1998, 2018 ஆகிய இரண்டு ஆண்டுகள் வெற்றி வகையை சூட்டியுள்ளது. அதே வேளையில் அர்ஜென்டினா 1978, 1986 – ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது. 3 – வது முறையாக பட்டம் வெல்ல போவது யார் என இரண்டு அணிகளின் இறுதி முடிவானது இன்று தெரிந்து விடும்.

தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவால் தோற்க்கப்பட்ட அர்ஜென்டினா அணியானது தொடரின் புள்ளியில் ரீதியாக வரலாற்றில் மிக பெரிய அதிர்ச்சியின் பக்கத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் துனிசியாவிடம் வீழ்ந்து சங்கடப்பட்டது. பின்னர் அர்ஜென்டினா சிறப்பாக விளையாடி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது.கால் இறுதிக்கு முந்திய சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1என வென்றது. அதனை தொடர்ந்து அரை இறுதியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் அர்ஜென்டினா தனது வழக்கமான திறனை வெளிப்படுத்தியது. பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை 3-0 என்ற கணக்கில் வென்றது.
பிரான்ஸ் அணி லீக் சுற்றில் முதல் இரண்டு ஆட்டங்களில் தொடரின் சிறந்த அணியாக தோற்றமளித்தது. கடைசி ஆட்டத்தில் துனிசியாவிடம் வீழ்ந்த போதிலும் கால் இறுதிக்கு முந்திய சுற்றில் போலந்தை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து மீண்டது. கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது. இருந்த போதிலும் மொராக்கோவுக்கு எதிராக அரை இறுதியில் கடுமையாக போராடி 2-0 என வெற்றி பெற முடிந்தது.
பிரான்ஸ், அர்ஜென்டினா ஆகிய இரு அணிகளும் கர்த்தர் உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களும் பெரிது இல்லை. 7- வதாக இன்று மோதும் இறுதி போட்டியே பெரியது ஆகும்.டீகோ மரடோனாவை போன்று அர்ஜென்டினா தேசத்தின் இதயங்களில் நுழைந்திருக்கும் மெஸ்ஸி தனது 5- வது முயற்சியில் கோப்பையை கைப்பற்றுவாரா? என்று எதிர்பார்ப்பு உலகெங்கிளலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடத்தில் உள்ளது. வெற்றி பரிசை வெல்லப்போவது யார்?