அம்பத்தி ராயுடு கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடிய விராட் கோலி, ரவி சாஸ்த்ரி… அனில் கும்ப்ளே பரபரப்பு புகார்..!
இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருந்தும் ஒரு முறை கூட உலக கோப்பையில் பங்கேற்க முடியாத வீரர்கள் இன்னும் பல பேர் இருக்கிறார்கள்.
இதில் வி.வி.எஸ் லக்ஷ்மன், இசாந்த் சர்மா ஆகியோர் மிகப்பெரிய உதாரணம் ஆவார்கள். இந்த பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக இணைந்தவர் தான் அம்பத்தி ராயுடு. இந்திய அணியில் இருக்கும்போது 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 20 ஓவர் போட்டிகளும் விளையாடிய ராய்டு 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அவர் உலகக்கோப்பை லட்சியம் வெறும் கனவாக போனது. இந்த ஐ.பி.எல் சீசனுடன் ஓய்வை அறிவித்தார்.
2018 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் CSK அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு ஒரு 100 உள்ளிட்ட 602 ரன்களை அடித்தார். இந்த நேரத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் வலுவான பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறியது. அந்தக் தருணத்தில் செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை 21 ஒரு நாள் போட்டிகளில் ராயுடு விளையாடினார். ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய அணியில் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார்.
அதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். இந்த நேரத்தில் இந்த தருணம் குறித்து பேசியுள்ள அணில் கும்ப்ளே 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் அம்பத்தி ராயுடு கண்டிப்பாக விளையாடியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. கடைசி நேரத்தில் அவருக்கு பதில் விஜய் ஷங்கர் ஆடியது குறித்து விமர்சனம் எழுப்பியுள்ளார்.
நிச்சயமாக இது மிகப்பெரிய தவறு. நான்காவது வீரராக அவரை தயார் செய்து வந்தார்கள். ஆனால் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்படும்போது போது அவருடைய பெயர் இல்லை. இது அனைவருக்குமே அப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று ரவி சாஸ்திரி மற்றும் கோலியை மறைமுகமாக முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே சாடி இருந்தார்.