உங்களுக்குக்கான அரசு வேலை எதுன்னு தெரிஞ்சுக்கோங்க
அரைக்காசு என்றாலும் அது அரசு வேலையில் தான் வாங்கவேண்டும் என்னும் பழமொழிக்கு ஏற்ப அரசு வேளையில் உள்ள மோகம் இன்றளவும் குறையாமல் இருக்கிறது. அரசு உத்யோகம் என்றாலே ஒரு பெரிய மதிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. வாங்கும் சம்பளம் விட அரசு வேலை என்று சொல்லி கொள்வதுதான் பெரிய பெருமை என்று நிறைய மக்கள் நினைக்கின்றனர்.
1970 களில் அரசு வேளைக்கு பெரிய அளவில் கல்வி தகுதிகள் பார்க்கப்படவில்லை அதற்கேற்ப கல்வி நிலை இருந்தது. ஆனால் இன்றய காலகட்டத்தில் கல்வி நிலை மாறியுள்ளது. நிறைய பட்டதாரிகள் இருக்கிறார்கள் அதற்கு ஏற்ப அனைத்து துறைகளுக்கும் அரசு நுழைவு தேர்வுகளை வைத்துள்ளது. அவரவர் தகுதிக்கு ஏற்ப அந்தந்த துறைகளில் அரசு தேர்வுகள் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு துறைக்கு ஏற்ப நிறைய வேலைகளுக்கு பொது தேர்வின் மூலமாக தான் மக்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.
எழுத்து தேர்வுகள், வாய்மொழி தேர்வு, நேர்காணல் போன்ற நிலைகளில் எல்லாம் அரசு வேலைகளுக்கு நியமனம் செய்யப்படுகிறது. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் மீண்டு பிற தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும் என்று பலர் கருதி வெற்றியும் அடைகின்றனர். இன்னும் சிலர் படிக்க ஆரம்பித்தவுடன் குறுகிய காலகட்டத்திலேயே தேர்வில் வெற்றி பெறுகின்றனர். அந்த அளவிற்கு அரசு வேலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்படி அரசு தேர்வுகளில் ஆர்வம் இருந்து போட்டி தேர்வுகளுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவர்கள்.
சில குழப்பங்களில் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த குழப்பங்கள் தீர போட்டி தேர்விற்கு எப்படி படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும், தேர்விற்கு எப்படி ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும். என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தகுந்த அரசு வேலையை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
உங்களுக்கு பிடித்த வேலை என்பது வேறு ஆனால் நீங்கள் படித்த துறைக்கு ஏற்ப தகுந்த வேலையை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதில் எந்த நிலை உங்களுக்கு பிடித்திருக்கிறதோ எது உங்களுக்கு ஏற்றதோ அந்த நிலை வேளைக்கு, தகுதி தேர்விற்கு உங்களை நீங்கள் தயார்படுத்த வேண்டும். முதலில் தேர்ந்தெடுக்கும் துறைகளில் உள்ள பணிகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இராணுவம் என்றால்,
ராணுவம்:
UPSC தேர்வு குழுமம் நடத்தும் CDS ,
நேரடி NCC நுழைவு,
நேரடி இன்ஜினீரிங் பட்டதாரி நுழைவு,
அது போக CISF , CAPF , BSF போன்ற படைகளுக்கான SI , ஆபிசர் ரேங்க் ஊழியர்களுக்கு SSC மாறும் UPSC நடத்தும் தேர்வுகளை வரிசைப்படுத்துங்கள்.
விமானப்படையில் சேர,
AFCAT தேர்வு,
நேரடி NCC நுழைவு,
நேரடி இன்ஜினீரிங் பட்டதாரி நுழைவு,
கடற்படையில் சேர
INET தேர்வு,
நேரடி NCC நுழைவு,
தமிழ்நாடு மாநில அளவிலான அரசு வேளைகளில் சேர TNPSC என்னும் தகுதி தேர்வை தங்களின் பட்ட படிப்பிற்கு ஏற்ப Group1, Group 2, Group 4 என்னும் பிரிவுகளின் கீழ் தேர்வுகளை எழுத வேண்டும்.
தமிழ்நாடு மாநில அளவிலான அரசு வேளைகளில் சேர TNPSC என்னும் தகுதி தேர்வை தங்களின் பட்ட படிப்பிற்கு ஏற்ப Group1, Group 2, Group 4 என்னும் பிரிவுகளின் கீழ் தேர்வுகளை எழுத வேண்டும். அவரவர் பட்டப் படிப்பிற்கு தகுந்த வேலைகளில் சேர அந்த வேலைக்கான தேர்வு விவரங்களை துறை சார்ந்த அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்.
தேர்விற்கான தேதி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் கால அளவு, தேர்விற்கு உண்டான சான்றிதழ்கள், முக்கியமாக தேர்விற்கான வயது வரம்பு ஆகியவைகளை இணைத்தில் அந்த துறை சார்ந்த அதிகார பூர்வ லிங்க்கில் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பின் அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை சிந்தித்து, பாட பிரிவுகளை ஆராய்ந்து அதற்கு பின் அந்த தேர்வை எழுத ஆயத்தமாக வேண்டும்.
உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப எந்த பணியில் சேர்ந்தால் உங்களால் சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த பணிக்குரிய தேர்விற்கு மட்டும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு UPSC பணிகளில் சேர ஆசை இருக்கும் ஆனால் மற்றவர்கள் அறிவுரை கூறுகிறார்கள் என்று அதை தவிர்த்து வங்கி பணிக்கான தேர்விற்கு உங்களை தயார்படுத்த நினைக்காதீர்கள். இதனால் காலம் விரையம் ஆவது மட்டுமின்றி வெற்றியின் நிலையும் குறைந்துவிடும் இதனால் உங்களுக்கு பிடித்த பணிக்கான தகுதேர்வையே எழுத தயாராகுங்கள். சிந்தித்து வெற்றி அடையுங்கள்.