அர்ஜென்டினா வெற்றி - FIFA உலக கோப்பையில் வெற்றி வாகையை சூடிய மெஸ்ஸி
அர்ஜென்டினா வெற்றி – ஃபிஃபா உலக கோப்பையானது கர்த்தாரில் உள்ள லூஸைல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மொத்தமாக 32 அணிகள் கலந்து கொண்டது. இந்த அணிகளில் எந்த அணி உலக கோப்பையை வெல்லப்போவது யார்? என மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதனை தொடர்ந்து நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் போட்டியானது (டிசம்பர் 18) நேற்று இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இரு அணிகள் மோதின.இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும் மற்றும் உலகின் தலைசிறந்த அணியான அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோத உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அனைவரும் போட்டியை காண்பதற்க்கு மிகவும் ஆவலுடன் இருந்தனர்.
வெற்றி

இதை தொடர்நது ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த 30 நிமிடங்கள் முடிவிலும் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணியானது உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மெஸ்ஸியின் எண்ண ஓட்டங்கள்

அரை கோட்டின் மைதானத்தில் லியோனல் மெஸ்ஸி நின்று கொண்டிருந்தார். அவரது கைகளை உயர்த்தி தொலைதூர வானத்தை பார்த்தார், கண்ணீர் அவரது முகத்தில் உருண்டது.அவரது பக்கத்தில் அவரது அணியினர் நடனமாடிக்கொண்டும், குலுங்கிக்கொண்டும், பூங்காக்களில் குழந்தைகள் விளையாடுவதை போல் ஓடிக்கொண்டு இருந்தனர். முகங்கள் மகிழ்ச்சியுடன் ஒளிர்ந்தன. இதுவே அவர்களின் இலக்கு விதி, அவர்களின் உச்சம், உலகின் உச்சியில் இருந்தன.
அர்ஜென்டினா வெற்றியின் முக்கியத்துவம்

இது “கேம்” மட்டுமல்ல அர்ஜென்டினா வெற்றிறன் முக்கியம். மெஸ்ஸிக்கு இந்த போட்டி அவரது இரண்டு கோல்களுடன், சரியான கால்பந்து வீரரின் சரியான முடிவு. கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸின் கையுறைகள் அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் என்றென்றும் பாதுகாக்கப்பட்டும், ஆட்டம் 3-3 என முடிவடைந்த பின்னர் டைபிரேக்கர்களின் தனது அணியை 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற இரண்டு கோல்களை அற்புதமாக தடுத்தார்.மேலும் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

இந்த தொடர்ந்து வெற்றியை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் “கால்பந்து போட்டிகளில் மிகவும் நினைவு கூடியவை, அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பிரான்ஸ் திறன் மற்றும் விளையாட்டு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்ததாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பகுதில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பகுதில், கால்பந்து உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு, ” GOAT ” மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்கள் கோல் கீப்பர் மார்டினெஸ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள் என தன்னுடை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.