இந்திய அணிக்கு எதிராக இருப்பதாக கபில்தேவ் கோபம்...

உலக கோப்பை தொடர் :

இந்த வருடம் உலக கோப்பை தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இது நான்காவது முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெற உள்ள தொடராகும். இதற்கான அட்டவணையை ஐசிசி கடந்த மாதம் வெளியிட்டது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. திடீரென ஒரு சில போட்டிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜெய் ஷா தெரிவித்து இருந்தார். இது இந்திய அணி ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் கொண்ட இந்த உலகக் கோப்பை அட்டவணையை மாற்றுவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த நிலையில் மாற்றம் செய்யும்படி முதலில் அட்டவணையை உருவாக்கியவர்கள் மீது கடும் கோபம் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ். ஒரு உலகக் கோப்பை அட்டவணை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு போட்டி கூட பல மடங்கு முக்கியத்துவம் பெற்றதாக அமையும். ஒரு சிறிய போட்டி தான் உலகக் கோப்பையை வெல்வதற்கு தடையாக இருக்கும். இந்திய அணி அனைத்து மைதானங்களிலும் விளையாடுமாறு அட்டவணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் பயணம் மேற்கொண்டு மற்ற மைதானத்திற்கு செல்ல வேண்டும். இதனால் பயணத்தின் போது பாதி நேரம் செலவிடப்பட உள்ளது. இது இந்திய அணிக்கு எவ்வாறு சவாலாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திய அணிக்கு எதிராக இருப்பதாக கபில்தேவ் கோபம் :

சென்னையில் முதல் போட்டி விளையாடும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. அது முடிந்த உடனேயே அடுத்ததாக டெல்லிக்கு புறப்பட உள்ளது. அங்கிருந்து அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை விளையாட அகமதாபாத் செல்ல உள்ளது. இதேபோன்று கடினமான அட்டவணை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இந்திய வீரர்களின் ஆட்டத்தை பாதிக்கும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. ஆனால் இதை சரி செய்ய பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐசிசி தொடர்களில் இந்திய அணி கடந்த 10 வருடமாக தோல்வி அடைந்து வருகிறது. இந்த வருடமாவது இந்திய அணி சிறப்பான கிரிக்கெட் விளையாடும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் அரை இறுதி அல்லது இறுதிப் போட்டியில் தோல்வி சந்திக்கும் இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன், இவ்வாறு கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply