பிரேமம் பட இயக்குனருடன் இணையும் இளையராஜா
இசைஞானி என்று அனைவராலும் புகழப்படுபவர் இளையராஜா. இவர் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவருடைய பல பாடல்கள் இவருக்கே போட்டியாக அமைந்துள்ளன. இளையராஜாவின் பாடல்களை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
இசைஞானி இளையராஜா தனது சிறந்த இசையமைப்பிற்காக சர்வதேச அளவில் சிறந்த ஆளுமையாக பார்க்கப்படுகிறார். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, இந்த வயதிலும் தனது இசை வாழ்க்கையைத் தொடர்கிறார். இசையின் மீதான காதலும் நாட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இளையராஜா காலத்திலும் அதற்குப் பிறகும் சினிமாவில் சிறந்த இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் மறைந்துவிட்டனர். அந்த வகையில் இளம் இசையமைப்பாளர்களுடன் போட்டி போட்டு தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது விடுதலை படத்திற்கு இசைமைத்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் போட்டுக் கொள்ளாமல் கருமமே கண்ணாக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவை சந்தித்ததாக பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மூன்றாவது முறையாக நடந்ததாகவும் ஆனால் இந்த முறை புகைப்படம் எடுக்க மறக்கவில்லை என்றும் அல்போன்ஸ் புத்ரன் கூறியுள்ளார். இளையராஜா பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ரோமியோ பிக்சர்ஸ் மூலம் இளையராஜாவின் அடுத்த படத்தில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
நேரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அதை தொடர்ந்து பிரேமம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா கூட்டணியில் ‘கோல்ட்’ படத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தை அடுத்து இளையராஜாவுடன் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதல் பெறுவதற்காக அவர் தற்போது இளையராஜாவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமம் இயக்குனருடன் இளையராஜா இணையும் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.