இந்தியா வந்த அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் உற்சாகம்
கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸின் வருகை இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகக்கோப்பை நாயகன்
கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் எமிலியானோ மார்டினெஸ். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி 3-3 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது.
இப்போட்டியில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எமிலியானோ மார்டினெஸ் பிரான்சின் இரண்டு பெனால்டி ஷூட்-அவுட்களை காப்பாற்றி உலகக் கோப்பை ஹீரோவானார்.
எமிலியானோ மார்டினெஸ் கோலை வைத்துக்கொண்டு நடனமாடும் பாணியால், எதிரணி வீரர்களுக்கு பதற்றத்தையும், கவனச்சிதறலையும் ஏற்படுத்தியதால், இந்தியாவில் பலர் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். தமிழ்நாட்டின் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டான்சிங் ரோஸ் என்ற அடைமொழியுடன் அவரை கொண்டாடினர். அந்த அளவுக்கு எமிலியானோ மார்ட்டின்ஸ் இந்தியாவில் பிரபலமான வீரராக அறியப்பட்டார்.
எமிலியானோ மார்டினெஸ் இந்தியா வருகை
இந்நிலையில் நட்சத்திர வீரர் எமிலியானோ மார்ட்டின்ஸ் இந்தியா வந்துள்ளார். மரடோனா, பீலே போன்ற வீரர்கள் வந்த மேற்கு வங்க மாநிலத்துக்கு எமிலியானோ மார்ட்டின்ஸ் அழைத்து வரப்பட்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மார்ட்டின்ஸ், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.
நாளை குழந்தைகளுக்கான பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அதன் பிறகு பீலே, மரடோனா மற்றும் கார்பீல்ட் சோபர்ஸ் என்ற பெயர்களில் ATK கிளப்பின் நுழைவு வாயில்களை திறப்பார்.
இந்தியாவுக்கு வருவது ஒரு பெரிய உணர்வைத் தருகிறது என்கிறார் எமிலியானோ மார்டின்ஸ். இந்தியா வர வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகியுள்ளது. இந்தியா வருவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இந்தியா வந்த அவருக்கு ATK மோகன் பகான் கிளப் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.