ஒடிசாவில் ரயில் விபத்து இரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை ரயில்வே முதல்வர் அஷ்வினி வைஷ்னவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று அதிகாலை பார்வையிட்டனர்.

பிரேத பரிசோதனை

காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு வருவதால் ஒடிசாவில் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிரிழந்த பயணிகளின் உடல்களை உடனடியாக சென்னை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. உடற்கூறு ஆய்விற்காக பிணவறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்ட சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்படும் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இரதம் கொடுக்க குவிந்த மக்கள்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில், ஆயிரக்கணக்கான மக்கள் தாமாக முன்வந்து மருத்துவமனைகளில் ரத்தம் கொடுக்க குவிந்தனர். மனிதநேயம் இன்னும் மறையவில்லை என்பதையே இது காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் சிகிச்சைக்காக 3 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. இது தொடரபாக மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவர்க கூறுகையில், நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர். இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply