ஒடிசா ரயில் விபத்து பலி எணிக்கை 294 ஆக அதிகரிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை அடைந்த சில நிமிடங்களில் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியது. பலத்த சேதமடைந்த பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்திலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் கவிழ்ந்தன.
விபத்தின் போது, கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முடிவில் இருந்த 4 பெட்டிகள் மீது மோதியது. கோரமண்டல் விரைவு ரயிலின் 8 முதல் வகுப்பு ஏசி பெட்டிகளான ஏ1, ஏ2 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளான பி1 முதல் பி6 வரை இந்த விபத்தில் முற்றாக சேதமடைந்தன. B7 முதல் B9 வரையிலான 3 பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் ஏற்கனவே அதவது விபத்து நடந்த நாளில் மீட்பு பணிகள் மூலம் பலியான 207 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 900 பேருக்கு மேல் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது 294 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.