கவாஸ்கர் வருத்தம்: ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் என நினைத்தேன்!

5 முறை ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றிய ரோகித் ஷர்மாவால் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை  இறுதிப் போட்டிக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாமல் போனது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் சாம்பியன்

5 முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற காரணத்தால் இந்திய அணிக்கு கேப்டன் பதவிக்கு கொண்டு வரப்பட்ட ரோகித் சர்மா, தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களிலும், வெளிநாட்டு தொடர்களிலும் ஜாம்பவான் ஆகி வருகிறார். இதனால் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், கேப்டனாக ரோஹித் சர்மாவிடம் இருந்து கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்த்தேன். இந்திய மண்ணில் வெற்றி பெறுவது சகஜம். வெளிநாட்டில் வெற்றி பெறுவதுதான் உண்மையான சோதனை.

ரோஹித் பேட்டிங் பார்ம்

வெளிநாட்டு மண்ணில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவிர டி20 கிரிக்கெட்டை மட்டுமே பார்த்தாலும் ரோஹித் சர்மா குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை.

100 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்த போதிலும், டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட ரோஹித் சர்மா முன்னேறவில்லை. அதேபோல், ஐசிசி தொடரில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் எடுத்த முடிவுகள் குறித்தும் தேர்வுக் குழு விளக்கம் கேட்க வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைக் கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். டிராவிஸ் ஹெட் 80 ரன்கள் கடந்த பிறகே இந்திய வீரர்கள் அவருக்கு பவுன்சரை வீசினர். இதற்கான காரணத்தை ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல், ஒரு தோல்விக்குப் பிறகு, ரோஹித் சர்மா தயாராவதற்கு குறைந்தது 20 நாட்கள் தேவை என்று கூறுகிறார்.

அப்போதுதான் அவர்களின் திறமை வெளிவரும், மூத்த வீரர்களுக்கு பொறுப்பு வரும். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், மூத்த வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குச் சென்று முன்கூட்டியே பயிற்சி பெற விரும்பவில்லை. ஏனென்றால் எப்படி விளையாடினாலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். டி20 போட்டிகளில் விளையாடினால் பணிச்சுமை அதிகரிக்கும் என்று கூறுவது ஏற்புடையதல்ல என கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply