"காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" படத்தின் டீசர் வெளியீடு….

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா கடைசியாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்த ‘டெடி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜனுடன் மீண்டும் இணைந்த ‘கேப்டன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்குப் பிறகு ஆர்யா தற்போது அதிரடி படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தனக்கென தனி பாணியில் நல்ல கமர்ஷியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் தயாராகியுள்ளது. இயக்குனர் M.முத்தையா தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் முத்துராமலிங்கம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கியுள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசைமைக்கிறார். சாண்டி, சதீஷ், ஷெரிப், பாபா பாஸ்கர் ஷோபி மற்றும் ஜானி ஆகியோர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்கள்:-

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் முதன்முறையாக ஆரியா நடித்துள்ள திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் கதாநாயகி ‘சித்தி இத்தானி’ இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இளைய திலகம் பிரபு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதுசூதன ராவ், தமிழ், RK விஜய் முருகன், அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஆர்யா முற்றிலும் மாறுபட்ட அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

"காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" டீசர் வெளியீடு:-

இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரின் 16வது சீசன் நேற்று (மார்ச் 31) கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்யா மாலை 5.30 மணிக்கு “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தின் டீசரை வெளியிட்டார். யூடியூப்பில் வெளியாகியுள்ள முத்துராமலிங்கத்தின் காதர்பாட்சா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply