விமலின் குலசாமி இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. மேலும் இந்த படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான MIK புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் விமல் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து பிரபல ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜான்கித் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, வினோதினி, கர்ணராஜா, மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மகாலிங்கம் இதில் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது.
ஆக்சன், த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள குலசாமி இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த ட்ரைலரில் அண்ணன் தங்கை பாசம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த விஷியங்கள் இதில் பேசப்பட்டுள்ளது.
இதில் படத்தின் இயக்குனர், நடிகருமான சரவணா சக்தி பேசுகையில் “பொள்ளாச்சி” சம்பவம் போன்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி “குலசாமி” திரைப்படத்தை எழுதினேன். மேலும் இதில் விஜய் சேதுபதி வசனம் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும். இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் விமல் உயரத்தை எட்டுவார். என்று கூறினார். ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திரைப்படம் நாளை ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.