உங்க குழந்தைங்க அதிகமா ஸ்மார்ட் போன் பாக்குறாங்களா அப்போ இதை படிங்க
மொபைல் போன்கலீல் முதன்மையான ஆப்பிள் நிறுவனத்தின் சி இ ஓ டிம்குக் அவர்கள் பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது என்னவென்றால் குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்கிறார்.
ஸ்மார்ட் போனின் ஆதிக்கம்:
டிஜிட்டல் மையமாக மாறியுள்ள இந்த உலகத்தில் அனைத்தும் டிஜிட்டலாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எளிமையான முறைகள் பயன்படுத்தும் தன்மையில் இருப்பதால் இந்த ஸ்மார்ட் போனை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட் போனை அதிகம் விரும்புகின்றனர். அதில் கேம்ஸ், வீடியோஸ், ஸ்டோரிஸ் போன்றவைகள் கண்கவரும் வகையில் அதில் தெரிவதால் குழந்தைகள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இப்படி குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் அவர்களின் எதிர்காலம் பெரிதளவில் பாதிக்கும். நினைவாற்றலை இழத்தல், கண் பார்வை பாதிப்பு போன்ற பரட்சனைகள் தோன்றும். இதனால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதை பற்றி டிம் குக் கூறியதாவது.
டிஜிட்டல் உலகின் ஜாம்பவானாக முன்னனியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சி இ ஓ- டிம் குக் அவர்கள் சமீபத்திய ஒரு நேர்காணலில் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்த நாங்கள் என்றுமே ஊக்குவித்ததில்லை. அதை விரும்பவும் இல்லை. குழந்தைகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் டிஜிட்டல் பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மனிதர்கள் செய்ய முடியாத வேலைகளை செய்யவும், நிறைய கற்றுக்கொள்ளவும் மனிதர்களுக்கு உதவும் வகையிலும் தான் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிக்கப் படுகின்றன. இதனால் டிஜிட்டல் வளர்கிறது. நம் பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த டிஜிட்டல்கள் இயங்க வேண்டும். ஒருபோதும் அவைகள் நம்மை இயக்க கூடாது. இன்றய கால கட்டதில் பிறகும் குழந்தைகளை சுற்றி டிஜிட்டல் சாதனங்கள் இருப்பதால் பிறக்கும்போதே டிஜிட்டல் குழந்தைகளாக பிறக்கின்றனர். இதனால் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் அவர்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டும்.
எந்த அளவிற்கு டிஜிட்டல் யுகம் வளர்ந்து இருக்கிறதோ அதே அளவிற்கு அவற்றை கட்டுப்படுத்தவும் முடியும். எனவே, உங்கள் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் அப்பயன்பாட்டை தடுக்க “Screen Time” என்னும் தொழில்நுட்பத்தை பயன்டுத்தலாம். இத்தொழில் நுட்பத்தினால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று டிம் குக் கூறியுள்ளார்.