450 கோடியில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா

இயக்குனர் சுந்தர்.சி தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியுள்ளார். அவர் இயக்கியுள்ள படங்கள் அனைத்தும் வசூல் சாதனையை படைக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சுந்தர்.சி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்கிய படமான அரண்மனை ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. இந்த அரண்மனை படமானது ஒன்று இரண்டு மூன்று என அடுத்தடுத்து வெளியவந்து வரவேற்பை பெற்றது. பேய் மற்றும் திகில் கட்சிகள் நிறைந்த அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர்.சி அவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்த சங்கமித்ரா படத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார். இந்த படத்தில் முதலில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்க இருந்தனர். ஆனால் தற்போது விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கமித்ராவின் தயாரிப்பு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸிடமிருந்து லைகா நிறுவனம் வங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதலில் இந்த படத்திற்கு 300 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 450 கோடியாக உயர்த்தபட்பட்டுள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற முடிவில் சுந்தர்.சி உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் ஆக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Latest Slideshows