சிராஜ் விலகல் : இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் திடீர் விலகல்...

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. பிறகு ஒரு நாள் தொடர் இன்று நடைபெற உள்ளது. இதிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது சிராஜ் திடீர் என விலகுவதாக தகவல் வெளியாகி  உள்ளது‌.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் :

அடுத்து மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து T20 போட்டிகள் இன்னும் நடைபெற உள்ளன. இன்று இரவு 7 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது அல்லது இவருக்கு பதிலாக இசான் கிஷன் செயல்படுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவர்கள் இருவரில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வியில் இருந்த நேரத்தில் திடீரென அதிர்ச்சியாக முகமது சிராஜ் விலகியுள்ளார்.

சிராஜ் விலகல் :

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் முகமது சிராஜ். அது மட்டுமல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் பவுலர் அவர்தான். அணியில் பும்ரா, ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத தருணத்தில் சிராஜ் அணிக்கு பலம் சேர்க்கிறார். இவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது கூட கடைசி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். அது மட்டுமல்லாமல் ஆட்டநாயகன் விருதையும் வாங்கினார்.

தற்போது திடீரென சிராஜ் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பரத், அஸ்வின், ரஹானே இவர்களுடன் சிராஜூம் நாட்டிற்கு திரும்ப உள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரையும் அணி அறிவிக்கவில்லை. இதனால் தாகூர் அல்லது உம்ரான் மாலிக் ஆகியோரில் ஒருவர் விளையாடலாம். இதில் யாருக்கும் அவ்வளவாக சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் இல்லை. இதனால் இந்திய அணி பவுலிங்கில் சற்று லேசாக உள்ளது. இது தவிர உலகக் கோப்பை தற்போது நெருங்கி வருகிறது. இதில் தகுதி சுற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த அணியிடம் இந்திய அணி தோல்வி பெற்றால் அது பெரிய அவமானம் ஆகும் என்று கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply