நகரமயமாகுதலில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது - எல்லோருக்கும் எல்லாம்

“இனி வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்”- முதல்வர் ஸ்டாலின் ஸ்டேட்மென்ட். அவர் தமிழகம் நகரமயமாகுதலில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். 18.02.2023-ல் வீடு, மனை விற்பனை காட்சியை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

இந்தியாவில் நகரமயமாகுதலில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்றும் தமிழகம் No. 1 என்ற நிலையை எட்டி உள்ளது என்றும் கூறினார். நகரங்களின் உள்ளேயும்  வெளியேயும் பெரும்பாலான வீதிகளில் அணிவகுத்து வரும் சிறிய, பெரிய மற்றும் உயர் மாடி கட்டிடங்களின் காட்சியானது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ந்து வரும் நிலைக்கு ஒரு சாட்சி ஆகும்.

வாழ்வாதாரத்தை நாடி எல்லோரும் நகர் புறங்களை நோக்கி கிராமங்களில் இருந்து இடம் பெயர்கிறார்கள் மற்றும் குடிபெயர்கிறார்கள். தற்போது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 49%-வினர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். 1991-ல் 1-கோடியே 90-லட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011ல் 3-கோடியே 4 0-லட்சமாக உயர்ந்தது, இது 2031-ல் 5-கோடியே 35 -லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி சுமார் 832 நகரங்கள் தமிழ் நாட்டில் உருவாகி உள்ளன. நகரங்கள் கிராமப்புறங்களினிடைய ஆன தொடர்பானது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

குடிசை இல்லாத நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். குறைந்த வருவாய் வாங்கி வருபவர்கள் பயனடையும் விதத்தில் அவர் அன்று ஊன்றிய விதையானது வேர் விட்டு மரமாகி, கிளைகள் விட்டு பரவி இன்று பலருக்கும் பலனளிக்கிறது.

மனைப் பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கும் Online முறையை தமிழக அரசு செயல் படுத்தி உள்ளது. DTCP மனைப் பிரிவுகளுக்கு அமுல்படுத்தி வெற்றிகரமாக செயல் பட்டு வரும் இத்திட்டமானது CMDA மனைப் பிரிவுகளுக்கும்  செயல் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல் பட்டு வருவதாக கூறினார்.

எல்லோருக்கும் எல்லாம் – ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஒரு வீடு மற்றும் மலிவு விலையில் வீடு  என்ற கொள்கையோடு தமிழக அரசு செயல் பட்டு வருகிறது,… ஏழை எளிய மக்கள், குறைந்த வருமானம் பெரும் மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் என எல்லா பிரிவினரும் வீட்டு வசதியினை பெறுவதற்க்கான பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது.  வெற்றிகரமாக செயல் பட்டு வரும் இத்திட்டமானது குறிப்பாக வீட்டு வசதி துறையில் 2030 ஆம் ஆண்டிற்க்குள் மக்கள் வாங்கும் திறனுக்குக்கு ஏற்ப வீட்டு வசதிகள் வழங்க முடிவு செய்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் வளர்ச்சி ஏற்பட வெளிவட்ட சாலை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உறுதி பூண்டுள்ளது. CREDAI ஆனது மக்கள் மற்றும் தொழில் சாலைகள் என அனத்திற்கும் தேவையான, போதுமான இடம் அளிக்கும் வகையில் செயல் பட வேண்டும். DTCP மற்றும் CMDA பகுதிகளில் உள்ள உயரமான மற்றும் உயரம் குறைந்த கட்டிடங்களுக்கு Online மூலம் திட்ட நடவடிக்கை பெற வசதி ஏற்படுத்தி உள்ளது.

EC – தடை இன்மை சான்று Online மூலம் எளிதில் பெற வசதி ஏற்படுத்தி உள்ளது. அகலம் குறைந்த சாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் Space Index ஐ அதிகரிக்க வேண்டி CREDAI- யிடம் பரிசீலித்து மக்களுக்கு சாதகமாக முடிவு வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.சமீபத்தில் Dubai-யில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில், அரபு நாடுகள் முதலீட்டார்களின் சந்திப்பில் தமிழ் நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று தான் அவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளதாகவும் அதற்கு உறுதுணையாக Real estate மக்கள் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அனைத்து தரப்பட்ட மக்களும் வாங்கத்தக்க விலையில் வீடு வழங்கும் வகையில் ரியல் எஸ்டேட் துறை முன்னேற வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Latest Slideshows