தற்கொலை முடிவு ஒரு தீர்வு அல்ல - நடிகர் சரத்குமார்

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”….. “நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்….” – என்பது போன்ற வாழ்க்கையின்  யதார்த்தத்தை பறை சாற்றும் பாடல்கள் பல உண்டு. பெரிய பெரிய வெற்றிகளை தலை நிமிர்ந்து இறுமாப்புடன் ஏற்கும் மனிதன் மிக சிறிய தோல்வி என்றால் கூட ஒரு ஆமை தன்னை ஓட்டுக்குள் மறைத்து கொள்வதை போல மறைந்து கொள்ள  மறைவிடம் தேடுகிறான் மற்றும் மரணத்தை நாடுகிறான்.

“தோல்வி இன்றி ஏது வரலாறு ?”  ….” வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை” என்பது போன்ற தத்துவ பாடல்கள் பல உண்டு. நதியின் போக்கில் மேடு பள்ளங்கள் உண்டு அது போல வாழ்க்கை பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.  தடைகளை வழிகற்களாக நினைத்து  வாழ நினைத்தால் ஆயிரம் வழிகள் பூமியில்.

சமீபத்தில் நடிகர் சரத்குமார்  தன்னை அறிந்தால் தற்கொலை எதற்கு ? மாண்டு விடும் மார்க்கம் மறைந்தால் துன்பத்தை தாண்டி  விடும் தாக்கம் தன்னால் வரும். 

5 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தற்கொலை முடிவு என வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயதுக்கெல்லாம் கோழைத்தனமாக தவறான முடிவுகள் எடுப்பது தவறு என்கிறார். இது போல தான் முடிவுகள் எடுத்து இருந்தால்  தனது வாழ்க்கையில் 2000 முறை தற்கொலைகள் நடந்திருக்கும் என்கிறார் நடிகர் சரத்குமார்.

தான் சொந்தமாக படம் எடுத்து தெருவுக்கு வந்ததும், வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு பணம் இல்லாமல் வெறும் 5 ரூபாயோடு பயணம் செய்ததும் ……அதிலிருந்து மீண்டதும் , அதே போல 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து முதுகெலும்பில்  அடி பட்டு மாச கணக்கில் சிகிச்சை பெற்றதும் டாக்டர்கள்  எல்லாம் இனிமேல் அடி தடி காட்சிகளில் நடிக்க கூடாது என்றதும்… பத்திரிக்கைகள் சரத்குமார் சரித்திரம் முடிந்தது என்று  பக்கம் பக்கமாக  செய்திகள் வெளியிட்டததும்… இவை அனைத்தையும் தாண்டி தான்  சூரியன், நாட்டாமை போன்ற பல வெற்றி படங்களை தந்ததும்,  வெற்றி சரித்திரம் பதித்ததையும் பகிர்ந்து , “உன்னை அறிந்தால்…… உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் “  என்று தன்னிலை அறிந்தால் தற்கொலை தேவை இல்லை ..  என்றும் “  மனமிருந்தால் மார்க்கம் உண்டு வாழ நினைத்தாள் வாழலாம்  … துணிந்தால் துயரம் இல்லை துக்கம் இல்லை வெட்கம் இல்லை … வாருங்கள் வாழலாம் என்கிறார்.

“வாழ்க்கை  வாழ்வதற்கே”

Latest Slideshows

Leave a Reply