Thalapathy Vijay Movies, Biography & Age | நடிகர் விஜய் வாழ்க்கை வரலாறு

நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனது தனித்துவமான நடிப்பால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் இதயத்திலும் தனி இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். அவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், சிறந்த நடனக் கலைஞர், மற்றும் தொண்டு செய்பவர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். அவரது முழுப்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் மற்றும் இவரை சுருக்கமாக விஜய் என்று அழைக்கப்படுகிறார்.மேலும் ரசிகர்கள் அவரை தளபதி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர். விஜய் தற்போது இந்திய சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் விஜய் - பிறப்பு

நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பின்னணிப் பாடகரான சோபா இவரது தயார் ஆவார். நடிகர் விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தாள். 2 வயதாக இருந்தபோது அவரது தங்கை இறந்துவிட்டார். தனது தங்கையின் மரணம் விஜய்யை பெரிதும் பாதித்தது. சிறுவயதில் சுறுசுறுப்பாக, குறும்புக்காரனாகவும், அதிகம் பேசக்கூடியவராகவும் இருந்த விஜய், தங்கையின் மறைவுக்குப் பிறகு மிகவும் அமைதியானவராக மாறிவிட்டார். தனது தங்கையை பற்றி தலைப்பில் எதாவது பேசினால் விஜய் உடனே அழுதுவிடுவார் என அவரது ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர் தனது தங்கையின் நினைவாக தயாரிப்பு நிறுவனத்தை திறந்து அதற்கு V.V Productions அதாவது Vidhya – Vijay Productions என பெயர் வைத்தார். விஜய் தன் தங்கையை அதிகமாக நேசிக்கிறார் என்பதற்கு இதுவே சான்றுகளாகும்.

நடிகர் விஜய் கல்வி வாழ்க்கை

சிறு வயதில் இருந்தே நடிகர் விஜய்க்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு தனது ஆரம்பக் கல்வியை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு மேல் படிப்புக்காக விருகம்பாக்கம் பாலலொக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இதனை தொடர்ந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பை முடித்த நடிகர் விஜய், நடிப்பின் மீது மிகுந்த ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

நடிகர் விஜய் சினிமா வாழ்க்கை

 விஜயின் தந்தை தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர், இதனால் விஜய் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். சிறு வயதில் இருந்தே படிப்பை விட நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த விஜய் 1984 இல், 10 வயதாக இருக்கும் போதே ‘வெற்றி’ படத்தில் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக சம்பளமாக 500 ரூபாய் பெற்றார். இதனை தொடர்ந்து 5 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

முன்னணி நடிகர்

விஜய் தனது 10 வயதில் படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர், தனது கடின உழைப்பால் தனது 18வது வயதில் முன்னணி நடிகராக 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்தார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரித்தார். இப்படமானது வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது.

நாளைய தீர்ப்பு படத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது படம் 1993ல் வந்த ‘செந்தூரபாண்டி’ படத்தில் நடித்தார். மேலும் இப்படத்தில் விஜயகாந்தும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அவரது முந்தைய படத்துடன் ஒப்பிடும்போது நன்றாக இருந்தது. இதற்குப் பிறகு, 1994 இல், விஜய்யின் மற்றொரு படம் ரசிகன் வெளியிடப்பட்டது, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது, ஆனால் இந்த படம் விமர்சகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், இந்தப் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானார், மேலும் மக்கள் அவரை விரும்பத் தொடங்கினர். இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு இளைய தளபதி என்று பட்டமும் கிடைத்தது.

1990 -ல் தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். ரசிகன் படத்திற்குப் பிறகு தேவா, விஷ்ணு, சந்திரலேகா, ராஜாவின் பார்வையிலே, சந்திரலேகா, கோவை மாப்பிள்ளை போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். மேலும் அவரது அனைத்துப் படங்களும் பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் விரும்பப்பட்டனர். விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான நடிப்பை அளித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.

1996ல் விஜய்யின் மற்றொரு படம் பூவே உனக்காக என்ற பெயரில் வெளியானது. இந்தப் படம் அவரை முன்பை விட பிரபலமாகவும் பிரபலமாகவும் ஆக்கியது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மாறிய விஜய், பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜய் பல படங்களில் பணியாற்றினார். அதில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆனது, மேலும் பல படங்கள் ஒரு கல்ட் கிளாசிக் என்ற அடையாளத்தைப் பெற்றன. 1999 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி, சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவரது பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆனது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு முன்பை விட அதிகமான படங்களில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதையை, திருமலை, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, துப்பாக்கி, கத்தி, திருமலை, போக்கிரி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களை தொடர்ந்து, இந்த வருடம் தொடக்கத்தில் 2023 ஜனவரி 11-ல் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது.

நடிகர் விஜயின் சமூகப்பணி

நடிகர் விஜய் தற்போது ஏழை எளிய மக்களுக்கு பெரிது உதவி வருகிறார். இந்நிலையில் உலக பட்டினி தினமான கடந்த மே 28 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒருநாள் சேவை என்ற அமைப்பின் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக உணவளித்தார். இதனை தொடர்ந்து தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் அழைத்து கவுரவித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ஓட்டுக்கு பணம் எடுக்கக் கூடாது. சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது ஒருநாள் முழுவதும் நடைபெற்றது.

மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் விஜய் 12 மணி நேரம் மேடையில் நின்றார். அதனால் ஒரு கட்டத்தில் களைப்பு தாங்க முடியாமல் மேஜையில் சாய்ந்தார். இந்த நிகழ்ச்சியானது இரவு 11.20 மணி வரை நடந்தது. அதையும் மீறி அடுத்த நாள் லியோ படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். படப்பிடிப்பில் அவரைப் பார்த்து படக்குழுவினர் வியந்தனர். தளபதியிடம் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்றார்கள். மேலும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

நடிகர் விஜய் திருமண வாழ்க்கை

விஜய் 25 ஆகஸ்ட் 1999 இல் பிரித்தானியாவில் பிறந்த இந்து இலங்கைத் தமிழ் சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். அவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளில் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டு லண்டனில் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு சென்னையில் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர்.

ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் திரைப்படமான வேட்டைக்காரன் (2009) இல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். திவ்யா சாஷா தெறி (2016) திரைப்படத்தில் தனது தந்தையின் டீனேஜ் வயதுக்கு முந்தைய சகோதரியின் மகளாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

விஜய் பாடிய பாடல்கள்

பின்னணிப் பாடகராக, விஜய் பாம்பே சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் மட்டுமல்லாமல்  அவர் ஒரு சிறப்பான நடனக் கலைஞர் ஆவார். சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவிலும், தென் கொரியாவின் புச்சியோன் சர்வதேச திரைப்பட விழாவிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

விருதுகள்

3 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிட்டன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். அவர் யுனைடெட் கிங்டம் நாட்டு திரைப்பட விருதுகளுக்கு ஒரு முறை பரிந்துரைக்கப்பட்டார்.

நடிகர் விஜயின் பிறந்தநாள்

 நாளை (ஜூன் 22) விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாட உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கமும் தீவிரமாக செய்து வருகின்றனர். இதையொட்டி ரசிகர்கள் சிறப்பு போஸ்டர்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளில் வருங்கால முதல்வர், தமிழகத்தின் எதிர்காலம் என்று போஸ்டர்கள் ஒட்டுவதை ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடமும் போஸ்டரை பல இடங்களில் தனது ரசிகர்கள் ஒட்டி தளபதியின் பிறந்தநாளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இந்த போஸ்டரானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லியோ முதல் பாடல் வெளியிடு

 இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லியோ படப்பிடிப்பானது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இசைமைப்பாளர் அனிருத் இசைமைத்துள்ளார்.

லியோ படத்தின் தொடக்கத்தில் வந்த அப்டேட்டிற்கு பிறகும் அப்டேட் ஏதும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கவலையுடன் இருந்த நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ படலானது வெளியாக உள்ளது. இப்பாடல் ஏழே நாட்களில் சுமார் 2000 நடனக் கலைஞர்களை வைத்து உருவாகியிருப்பதாகவும், இந்தப் பாடலை திட்டமிட்டு முன்னதாகவே முடித்துவிட்டதாகவும், இந்தப் பாடலுக்கு விஜய் தனது முழு முயற்சியையும் செய்துள்ளதாக தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் 68வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லியோ படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதால், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply