நலம் தரும் 9 நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்

தானியங்கள் பல வகைகளில் இருந்தாலும் நம் நாட்டில் சிறந்ததாகவும், சமய பண்பாடாகவும்  பார்க்கப்படுவது நவதானியங்களே. நவ என்றால் ஒன்பது என்று பொருள் அதாவது ஒன்பது வகையான தானியங்களைத்தான் நவதானியங்கள் என்று சொல்கின்றனர். இந்த நவதானியங்களை உணவாக மட்டும் உண்ணாமல்.

சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகின்றனர். வீடு கட்டும்போது, திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பந்தல் அமைத்தலின் போது, கோவிலின் நிகழ்ச்சிகளின் போது இதை முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.

பின் வழிபாட்டுப் பொருளாகவும் நவதானியங்களை மதிக்கின்றனர். நவதானியங்களை இந்த முறைகளில் பயன்படுத்துவது ஏன்? ஏனென்றால் நவ கிரகணங்களோடு இந்த நவ தானியத்தை ஒப்பிடுவதால் இந்த முறைகளில் பயன்படுத்துகின்றனர். நவ கிரகத்தின் தெய்வங்களை வணங்கும்போது அதற்குரிய தானியத்தை வைத்து வணங்குவதும் நம் மரபாக உள்ளது.  நவதானியங்களையும் அதன் பயன்களையும் இந்த பதிவில் காண்போம்.

9 நவதானியங்கள் பெயர்கள் :

1.நெல்,

2.கோதுமை,

3.துவரை,

4.எள்,

5.உளுந்து,

6.பாசிப்பயிறு,

7.கொண்டைக்கடலை,

8.மொச்சை,

9.கொள்ளு போன்றவைகள் ஆகும்.

உடலை வலுவாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுவது நவதானியங்கள். அதாவது அசைவ உணவுக்கு இணையான சைவ உணவு எது என்றால் நவதானியங்கள் தான். ஏனென்றால் ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

பொதுவாக அனைத்து வகையான பயிறுகளில் ப்ரோட்டீன் என்று சொல்லப்படுகின்ற புரத சத்து அதிகமாக உள்ளது. நம் முன்னோர்கள் தானியங்களை அதிக அளவில் உணவுகளில் பயன்படுத்தினர் அதனால்தான் நீண்ட நாட்கள் எந்தவிதமான நோயுமின்றி உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு பழக்கம் மாறி உள்ளதால் உடலில் சத்துக்கள் குறைந்து பெயர் தெரியாத நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தானியங்களை உணவில் பயன்படுத்துவது சிறந்தது. நவதானியங்கள் ஒவ்வொன்றிற்கும் உள்ள நன்மைகள் பின்வருமாறு.

நவதானியங்கம் பெயர்கள் மற்றும் பயன்கள்

நவதானியங்கள் பெயர்கள்: நெல்

நெல்லில் இருந்துதான் அரிசி எடுக்கப்படுகிறது. இந்த அரிசியில்  20 மில்லி அளவில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் பி காம்லஸ், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

புழுங்கல் அரிசி உடல்நலனுக்கு ஏற்றது. நிரிழி நோய்களில் இருந்து காக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சீரக சம்பா அரிசி வாத நோய்களை போக்க வல்லது. பசியை தூண்டவும் செய்யும். இதை அதிக அளவிலும் எடுக்க கூடாது ஏனெனில் பித்தம் கூடும்.

சிவப்பு அரசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலை குறைக்கவும், எலும்புகள்,தசைகள் வலு பெறவும் உதவுகிறது.  மேலும் இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் தவிடிலும் நார் சத்து நிறைந்துள்ளது. அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் அவுலும் உடலுக்கு மிகவும் நல்லது.

நவதானியங்கள் பெயர்கள்: கோதுமை

கோதுமையில் புரதம், பாஸ்பரஸ், கரோட்டின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து போன்றவைகள் நிறைந்துள்ளது. இந்த கோதுமையைதான் வட இந்திய மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த கோதுமை மாவை எண்ணெய் மற்றும் நெய் இல்லாமல் சமைத்து சாப்பிட முடியும். அப்படி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கிறது. சர்க்கரையின் அளவை குறைக்கிறது. உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. கப பிரச்சனைகளை தீர்க்கிறது.புளித்த ஏப்பத்தையும் சரிசெய்கிறது. உடல் வலியையும் சரி செய்கிறது.

நவதானியங்கள் பெயர்கள்: துவரை

துவரம் பருப்பில் புரதச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, அமினோஅமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த பருப்பு வகையை தினமும் பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அலர்ஜி வராமல் இருக்கவும், உடலில் ஏற்பட கூடிய காயங்கள், வலிகளை சரி செய்யவும் உதவுகிறது. இதய நோய் பிரச்சனைகளை சரி செய்யப் பயன்படுகிறது. இரத்த சோகை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சத்து குறைவு போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.

நவதானியங்கள் பெயர்கள்: எள்

எள்ளில் கால்சியம், இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் சி இவ்வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. எள்ளை அதிகம் பயன்படுத்தினால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை  சரி செய்கிறது. தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. 

நவதானியங்கள் பெயர்கள்: உளுந்து

உளுந்தம் பருப்பில் தாது உப்புகள், நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளது. இது உடல் சூட்டை தணிக்கிறது. இடுப்பு வலு பெறவும் , இடுப்பு வலியை சரி செய்யவும் பயன்படுகிறது. எலும்பு, தசை, நரம்புகளுக்கு மிகச் சிறந்த தானியம் இந்த உளுந்து. கருப்பு உளுந்து பெண்களுக்கு நல்லது. இதில் களி செய்து சாப்பிட்டு வர உடலில் எந்தவிதமான நோயும் அண்டாது. தேகத்திற்கும் நல்லது.

நவதானியங்கள் பெயர்கள்: பாசிப்பயிறு

பாசிப்பயிரில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளது. இப்பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள் நினைவுத்திறன் பாதிப்பை சரிசெய்கிறது. மலச்சிக்கல், பித்தம், மூலம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும் கோடைக்காலங்களில் ஏற்பட கூடிய சின்னம்மை, பெரியம்மை தொற்றுகளையும் சரிசெய்கிறது. காய்ச்சலை குணமாக்குகிறது.

நவதானியங்கள் பெயர்கள்: கொண்டைக்கடலை

கால்சியம், இரும்புச்சத்து, புரோட்டீன், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. பெண்கள் கொண்டைக் கடலையை அதிகம் எடுத்துக்கொண்டால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம். இரத்த சோகை பிரச்சனைக்கும் நல்லது. உடலையும் உறுதியாகும். முக பள பளப்பைத் தரும். 

நவதானியங்கள் பெயர்கள்: மொச்சை

மொச்சையில் உள்ள சத்துக்கள் மினரல், நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.அணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது. இதில் போலேட் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. குடல் இயக்கத்தை சீராக்குகிறது. செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.

நவதானியங்கள் பெயர்கள்: கொள்ளு

இந்த தானியத்தில் தாது உப்புகள், பாஸ்பரஸ், மினரல், இரும்புச் சத்து, மாவுச்சத்துகள் ஆகியவை அதிகம் நிறைதுள்ளது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. கொள்ளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் காய்ச்சல், ஜலதோஷம் சரி ஆகும். சிறுநீரக கற்களை கரைக்கிறது. சர்க்கரை நோய்களை சரி செய்கிறது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Latest Slideshows

Leave a Reply