ரஜினிகாந்த் - “ பூந்தோட்டமா வாழ்க்கை…ஒரு போராட்டமே வாழ்க்கை “…ஒரு  குறிப்பு

ரஜினிகாந்த் – அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் வாழ்க்கைப் பயணம் என்பது நதியின் பயணம் போல் பல மேடு பலங்கள் நிறைந்த பயணம். இந்த வாழ்க்கைப் பயணம்  அனைவருக்கும் அனுபவம் அளிப்பது என்பது அனுபவபூர்வமான வரலாற்று  உண்மை. 

தடைகள்  நமக்கு  வழிகள்

ரஜினிகாந்த் அவர்களும் ஒரு சில கசப்பு அனுபவங்களை எதிர் கொண்டார், வெற்றி பெற்றார். “ பூந்தோட்டமா வாழ்க்கை……..  ஒரு போராட்டமே  வாழ்க்கை “ என்றும்  “  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா…….. தடைகளும் நமக்கு  ஒர் வழிகள் அப்பா “  என்றும் போராடும் அவசியத்தை அவர் அறிவுறுத்துகிறார். புகழின் போதை அவரையும் தடுமாற செய்துள்ளது. அவரை தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபட செய்தது. தன்னிலை மறந்து தள்ளாட வைத்துள்ளது. ஜரிதா பீடா என்பதை வாயில் வைத்தே வசனம் பேசி நடித்தார், வளம் வந்தார். அளவு கடந்த புகழ், பண வரவு அவர் பாதையில் ஒரு பாதகமாக அமைந்தது. ரஜினிகாந்த் அவர்களும் ஒரு சில கசப்பு அனுபவங்களை எதிர் கொண்டார், வெற்றி பெற்றார்.

“ பூந்தோட்டமா வாழ்க்கை……..  ஒரு போராட்டமே  வாழ்க்கை “ என்றும்  “  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா…….. தடைகளும் நமக்கு  ஒர் வழிகள் அப்பா “  என்றும் போராடும் அவசியத்தை அவர் அறிவுறுத்துகிறார். புகழின் போதை அவரையும் தடுமாற செய்துள்ளது. அவரை தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபட செய்தது. தன்னிலை மறந்து தள்ளாட வைத்துள்ளது. ஜரிதா பீடா என்பதை வாயில் வைத்தே வசனம் பேசி நடித்தார், வளம் வந்தார். அளவு கடந்த புகழ், பண வரவு அவர் பாதையில் ஒரு பாதகமாக அமைந்தது. மிகவும் மூர்க்கமாக செயல் பட்டார், கண்மூடித்தனமாக நடந்தார். கண் ணாடிகளைஉடைத்தார். இது அவரது உண்மையான ரசிகர்களை மிகவும் உறுத்தியது.  இவர் மீண்டு வருவாரா என கவலைக்கு உள்ளாக்கியது. 

புயலுக்கு பின் அமைதி

கண்ணாடிகள் நொறுக்கிய அவரது அதே கண்களில் கண்ணியமான லதா தென்பட்டார். அது ஒரு விருப்பமான திருப்பமாக, திருமணமாக அமைந்தது. திசை அறிந்த பறவையாக மேல் நோக்கி பயணத்தை தொடர வைத்தது. இல்லறத்தில் மட்டுமில்லாமல் இறைஉணர்விலும் ஈரப்பு,  ஈடுபாடு ஏற்பட்டது.

தலைவன் எவ்வழியோ அவ்வழியே  தன்னார்வலர்கள்

அவரது ஆன்மீக உரையாடல்கள், அறிவுரைகள் ரசிகர்களை ஆண்டது, ஆட்கொண்டது.  தமிழ்நாடு  ராகவேந்திர ஸ்வாமிகளை அதிக அளவில் அறிய காரணமானார்.  குறிப்பாக இளைகர்கள்   ராகவேந்திர ஸ்வாமிகளை வணங்க ஆரம்பித்தனர். வியாக்கிழமைகளில்  ராகவேந்திர ஸ்வாமிகள்  கோவில் சென்றனர். அவரது அண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலையை  மறந்தவர்களை  திரும்பி பார்க்க வைத்தது. நெற்றியில்  பட்டையும் கழுத்தில் ருத்திராட்சரமும் அணிய வைத்தது. குறிப்பாக இளைகர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபட வைத்தது  வைத்தது மிக வியப்பாக இருந்தது.  ஒரு நடிகர் இந்த  மாற்றத்தை ஏற்படுத்தியது  வியக்கதக்கதாக  இருந்தது. 

மாற்றங்களை நோக்கும்  பாபாவின் மறுபிரவேசம் 

“ கதம் …கதம் ..” என்ற கலக்கிய பாபா தனது முதல் வெளியீட்டில் களம் பதிக்கவில்லை. “ ஏன்? ….எதனால்?…. எப்படி ?…. என பலரது கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த பலரது கேள்விகளுக்கு விடை  தரவும் , வியக்க  வைக்கவும்,  பல ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க 10.12.2022 அன்று  திரை அரங்குகளில் பாபா மறுபிரவேசம் செய்துள்ளார்.  இந்த “ கதம் …கதம் ..”  பாபா “ சதம்,…. சதம்…” பெறுவாரா  என்பரா ?  என்பது நம் அனைவரது  ஆர்வம்,… ஆவல். ஸ்டைல் மன்னனின் தர்பாரில் தகரம் கூட சிகரம்  ஆகலாம் “  நிதம் ….  நிதம்..” .

Leave a Reply

Latest Slideshows