மணத்தக்காளி கீரை மற்றும் மணத்தக்காளி பழங்களின் பயன்கள்
மணத்தக்காளி செடியின் இலை, காய், பழம், வேர் என அனைத்தும் மிகவும் மருத்துவ குணங்களை கொண்டது. மணத்தக்காளி கீரையை பயன்படுத்தும் அளவிற்கு இதன் பழங்களை அதிகம் பயன்படுத்துவது கிடையாது. ஆனால் இப்பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இதன் கீரையை போன்றே பழங்களிலும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளி கீரையும் அதில் விளையும் பழங்களும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை இவைகளின் பயன்களை ஒவ்வொன்றாக இப்பதிவில் காண்போம்.
மணத்தக்காளி பழம் - நன்மைகள்
- மணத்தக்காளி பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
- மணத்தக்காளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதனை சப்பிடும்பொழுது பசி இன்மை அஜிரம் நீங்கி செரிமான பிரட்சனைகளை தடுக்கும். மலச்சிக்கலை குறைத்து வயிற்று பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
- உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதில் உட்கிரகிக்க இப்பழங்கள் பயன்படுகிறது. இப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்கி உடல் ஆரோக்கியதையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
- பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் கர்ப்ப காலத்திலும் இப்பழங்களை சாப்பிட்டு வரலாம். இது தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.
- வாய் புண் மற்றும் வயிற்று புண் இருக்கும் சமயங்களில் மணத்தக்காளி இலையுடன் மணத்தக்காளி பழங்களையும் சேர்த்து அடிக்கடி சாப்பிடும்போது இப்பிரச்சனைகள் குறைய தொடங்கும்.
- சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மருத்துவ குணங்களும் மணத்தக்காளி பழங்களில் நிறைந்துள்ளன. இப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
- இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது சிறுநீரை பெருகச் செய்து, சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள், நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.
- கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் இப்பழங்களில் நிறைந்துள்ளன. இப்பழங்களை சாப்பிடுவதால் கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கலாம். கண் எரிச்சல், கண் சூடு போன்றவற்றை குறைத்து கண்களை குளிர்ச்சியாக்கும்.
- புற்றுநோய்யை எதிர்க்கும் மருத்துவ குணங்கள் இப்பழகளில் இருப்பதால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்காமல் இப்பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மணத்தக்காளி கீரை - நன்மைகள்
- மண்ணீரலை பலப்படுத்துகிறது. மணத்தக்காளியானது அதிக அளவிலான நோய்யெதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. இது உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி மண்ணீரலை பலப்படுத்துகிறது. மண்ணீரலில் நோய்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
- அதிக அளவில் நன்மை தரக்கூடிய கீரைகளில் மணத்தக்காளியும் ஒன்று. இக்கீரையில் அதிக அளவு நீர்ச்சத்துக்களும் மிக குறைத்த அளவில் புரத சத்துக்களும், கொழுப்பு சத்துக்களும் உள்ளது. மேலும் வைட்டமின் ஈ, வைட்டமின் டி சத்துக்களும் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட் குணங்களும் நிறைந்துள்ளன.
- மணத்தக்காளி கீரையுடன் மஞ்சள், சீரகம், பூண்டு, மிளகு தூள் சேர்த்து அடிக்கடி சூப் போன்று செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அது மட்டுமின்றி சிறுநீர் கடுப்பை குணமாக்கும். மேலும் சிறுநீரகத்தில் உள்ள புண்களை ஆற்றி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளையும், குடல் புழுக்களையும் வெளியேற்றும்.
- மணத்தக்காளி கீரையுடன் பாசி பருப்பை சேர்த்து கூட்டாக செய்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்கள், வாய் புண்கள், குடல் புண்களை ஆற்றும். உடலின் உட்பகுதிகளில் உள்ள ரணங்களை குணமாக்கும்.
- குடலில் உள்ள நன்மை செய்யும் பேக்டீரியாக்களை அதிகரிக்க செய்யும். குடல் அலர்ஜியை குணமாக்கும் மேலும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இக்கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்போது நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.
- பெண்களுக்கு அதிக நன்மையை தரக்கூடியது இந்த மணத்தக்காளி கீரை. இந்த கீரையை அடிக்கடி சூப் போன்று குடித்து வந்தால் கர்ப்பப்பை வலுவடையும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- மணத்தக்காளி கீரை இதயத்தின் ஆரோக்கியதையும் மேம்படுத்தும். கண் பார்வை திறனை அதிகரிக்க செய்யும். உடல் சூடு உள்ளவர்கள் இந்த கீரையை அதிகம் பயன்படுத்தலாம். காசநோய் உள்ளவர்களும் இந்த கீரையை அடிக்கடி எடுத்து கொள்வது நல்லது. உடல் வலியை நீக்கி நல்ல தூக்கத்தையும் தரக்கூடியதாக இந்த கீரை செயல்படுகிறது.
- தொண்டை கரகரப்பை நீக்கி குரலை இனிமையாக மாற்றும் ஆற்றலும் கொண்டது. இக்கீரையில் உள்ள உயர்தரமான ஆன்டிஆக்சிடண்ட் குணங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளச்சியை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. இக்கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் மிக குறைவு.