மிளகு கீரையின் பயன்கள்

மிளகுக்கீரை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளில் விளையக் கூடிய தாவரங்களில் ஒன்று. இது லேமினேஷியா குடும்பத்தை சேர்ந்தது. இதிலிருந்துதான் மிளகு கீரை எண்ணெய் பிரித்தெடுக்கப் படுகிறது. இந்த கீரையின் எண்ணெய் தெரபிகளுக்கு எசென்ஷியல் ஆயிலாக பயன்படுத்தப்படுகிறது.   

மிளகு கீரையின் சத்துக்கள்:

மிளகு கீரை எண்ணெயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள், மாங்கனீசு, மெக்னிஷியம், போலேட், பொட்டாசியம், காப்பர், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த மிளகு எண்ணெய் உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களையும் எளிதில் போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது..

மிளகு கீரை எண்ணெயின் பயன்கள்:

  • மிளகுக் கீரை எண்ணெயை சமையலில்  மணத்திற்காக பயன்டுத்தலாம் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகளை சேர்த்து உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம்.
  • இயற்கையில் இரைப்பை குடல் வலி நீக்கியாக மிளகு கீரை எண்ணெய் இருப்பதால், உடலில் வாயு தொல்லையை குணப்படுத்த உதவும். மேலும் இது வயிறு மற்றும் குடல் பிடிப்பை சீராக்குகிறது. வயிறு சரியின்மைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
  • இருமல், சளி மேலும் ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி, கடுமையான புரையழற்சி, போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் மிளகுக்கீரை எண்ணையை மார்பில் தவினாலோ அல்லது ஆவியாக்கி உள்ளிழுத்தாலோ, நாசி நெரிச்சல் மறைந்துவிடும்.
  • இந்த எண்ணெயின் சில துளிகளை கைக் குட்டையில் தெளித்து கொண்டு அவற்றை சுவாசித்தாலோ அல்லது மணிக்கட்டில் தடவிக் கொண்டாலோ நீண்ட நேர தலைவலி கூட நீங்கி விடும். கண்களில் படாமல் பயன்படுத்த வேண்டும். சுவாசிக்கும் போது மூளை செயல் திறனை அதிகரிக்கிறது.
  • உடலில் தேய்த்து குளித்து வர உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வலியில் இருந்து நிவாரணம் பெற பயன்படுகிறது. தலையின் நடுப்பகுதியில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்தால், பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கும். அதுமட்டுமின்றி பருக்கள் இல்லாத பொலிவான சருமத்தையும் பெறலாம்.
  • மிளகுக்கீரை எண்ணெய் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீர் குழாய் நோய்த்தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தவும் முடியும்.
  • பற்பசையில் மிளகுக்கீரை எண்ணெயை சிறு துளி சேர்த்து பல் துலக்கினால் துர்நாற்றம் மற்றும் பல்வலி சரியாகும். பேக்டீரியாக்களால் பாதிக்கப்பட்ட ஈறுகள் பிரச்சனையையும் இது போக்க வல்லது. பேக்டீரியாக்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தியாகவும் இந்த எண்ணெய் செயல் படுகிறது.
  • மிளகுக் கீரை எண்ணெய்க்கு தசையை விரிய வைக்கும் தன்மை இருப்பதால் குடல் நோயை குணப்படுத்த உபயோகப்படுகிறது.
  • உலர் சருமம், உளர் முடி கொண்டவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த எண்ணெய் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை தூண்டுகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். தலையில் மசாஜ் செய்யும் போது பேன், பொடுகு பிரட்சனைகள் தீரும். 

Latest Slideshows

Leave a Reply