சிங்க  நடை போட்டு சிகரத்தை அடைய போகும் முத்தமிழ்செல்வி

சிகரத்தை அடைவதை சிறு வயது முதல் கனவாக கொண்டவர்  முத்தமிழ்செல்வி – எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு தகுதி பெற்ற முதல் தமிழ் பெண். இவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் ஜோகில்பட்டியை சேர்ந்த  தவசி அம்மாள் என்பவரது மகள் ஆவார். இவரது கணவர் குணசேகரன் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். 

சிறு வயது முதல் சிகரத்தை அடைவதை கனவாக கொண்டு  பல்வேறு பயிற்சிகளையும் , முயற்சிகளையும்  மேற்கொண்டு வருபவர்  முத்தமிழ்செல்வி.   ஒரு படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் சரியான ஊக்குவிப்பும், உட்சாகமும்  அவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கம் பகுதியில் வாழும் முத்தமிழ்செல்வி  ஒரு ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். 

முத்தமிழ்செல்வியின் மூன்று முத்தான சாதனைகள்

முத்தமிழ்செல்வி கடந்த மகளிர் தினத்தன்று  திருப்பெரும்புதூர் அருகே 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி தனது முதல் சாதனை படைத்தார்.

அதேபோல்  முத்தமிழ்செல்வி தனது 9   வயது இளைய மகள் வித்திஷாவை முதுகில் கட்டிக்கொண்டும்,  12 வயது மூத்த மகள் தக்க்ஷாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டும், மூவரும் கண்களை கட்டிக்கொண்டு இமாசல பிரதேச மாநிலத்தில் குலாங் கிராமத்தின் மலை உச்சியிலிருந்து 165 அடி உயரத்தை 55 வினாடிகளில் இறங்கி  தனது இரண்டாவது சாதனை படைத்தார்.

கடந்த குடியரசு தினத்தன்று வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவதாரத்தில் சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 மணி நேரம் குதிரை மீது அமர்ந்து 1389 அம்புகள் துல்லியமாக எய்து 87 %  பெற்று தனது மூன்றாவது  உலக சாதனை படைத்தார்.

மலை ஏற சான்றிதழ்

இதையடுத்து முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு  முடிவு செய்து Asian Trekking என்னும் தனியார் நிறுவனத்தை அணுகினார். அப்போது அவர்கள்  மலை ஏறும் வேண்டும் என்றால் மலை ஏறும் படிப்பை படித்திருக்க வேண்டும் அல்லது 5500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.  

மலை ஏறும் படிப்பை படிக்காத  காரணத்தால்  Kashmir Ladak – பகுதியில் உள்ள சுமார் 6469 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு தணிப்பெண்ணாக சென்று சாதனை படைத்தார். இதனால்  Asian Trekking என்னும் தனியார் நிறுவனத்திடமிருந்து மலை ஏற சான்றிதழ் பெற்றார். இதனால்  எவரெஸ்ட் மலைக்கு செல்ல போகும் முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ்செல்வி பெருமை பெற்றுள்ளார்.

டெல்லியில் இருந்து இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை முடித்து சென்னை  வந்தபோது செல்விக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ்செல்வி, “இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை முடித்து வந்துள்ள நான்  எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அடுத்து   முதல் தமிழ்ப் பெண்மணியாக எவெரெஸ்ட மலை ஏறி சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்” என்று கூறினார்.

பொருளாதார உதவி

இந்த சாதனையை செய்வதற்கு Rs.45 லட்சம் பொருளாதார உதவி  தேவைப்படுகிறது.  அந்த  அளவு பொருளாதார  வசதி வாய்ப்பு இல்லாததால் அரசு மற்றும் தன்னாலர்வர்களின் பொருளாதார உதவியை வேண்டினார். மேலும் இந்த சாதனையை செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டுமெனவும் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்  என்று கூறினார்.

இது குறித்து அறிந்த விருதுநகர் மாவட்ட  கலைக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேக நாதா ரெட்டி அரசு சார்பில் உதவுவற்தக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

இதன் விளைவாக தற்போது இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அரசு சார்பில் Rs.10 lakhs  நிதி வழங்கி உள்ளார்.    தன்னாலர்வர்களின் பொருளாதார உதவியை Rs.15  lakhs பெற்றுள்ளார் மற்றும்  அவரது  நண்பர்கள் , உறவினர்கள்  மூலம்  Rs.20 lakhs பெற்றுள்ளார்.

இவர் தனது பயணத்தை  ஏப்ரல் 05/04/2023 – இல் தொடங்கி இரண்டு மாதத்தில் நிறைவு செய்வார்.     சிங்க  நடை போட்டு சிகரத்தை அடைவார். ஒரு முடிவு இருந்தால் அதில் தெளிவு இருந்தால் அந்த வானம் வசம் ஆகும்

Latest Slideshows

Leave a Reply