இந்த வாட்டி கண்டிப்பா கன்பார்ம் பண்ணிக்கலாம் வாரிசு ஆடியோ லான்ச் சென்னைல தான்

விஜய் ,ராஷ்மிக்கா மந்தனா,குஷ்பூ மற்றும் சரத்குமார் போன்றவர்கள் நடிச்சி இருக்காங்க.
வாரிசு படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க போவதுபோல் தகவல் வெளியாகி இருக்கு, ரிசென்ட்-ஆ பொன்னியின் செல்வனுக்கு அப்புறம் வாரிசு படம் கன்பார்ம் ஆகியிருக்கு, லான்ச் என்னமோ துபாயில் நடக்க போகுதுனு வதந்தி போயிட்டு அதுக்கு வாரிசு படக்குழுவினர் இப்போ முற்று புள்ளி வச்சி இருக்காங்க, ரசிகர்கள் பாவம் ரொம்ப ஏக்கத்தில இருக்காங்க மாஸ்டர் ஆடியோ லான்ச் சிம்பிள்-ஆ தான் நடந்தது, அதுகூட பரவாயில்ல பீஸ்ட்க்கு ஆடியோ லான்ச்சே வைக்கல, அதனால இந்த ஆடியோ லான்ச் மேல கண்டிப்பா பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

தமன் அவர்கள் விஜய் கூட இப்போதான் முதல் முறையா இசையமைக்குறாரு, அதுவும் இல்லாம தமன் அவர்கள் விஜயோட ரசிகன் என்பதால கண்டிப்பா அதற்கேற்றமாரி அவர் நல்ல சாங் குடுத்து இருப்பாரு என்பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கு, முன்னரே ஒரு சில போஸ்டர் லாம் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாங்க, அத பார்த்து மக்கள்  கொண்டாடும் படமா இருக்கும்னு சொல்றாங்க, வாரிசு டைட்டில் கூடவே தி பாஸ் ரிட்டர்ன்ஸ் வசனம் மக்கள் இன்னும் குஷியாக்கி இருக்கு, வாம்சியோட தோழா திரைப்படம் நல்ல திரைக்கதையை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில அந்த அளவுக்கு பேசப்பட்டதா இல்ல, அதுக்கு அப்புறம் இப்போ தளபதிகூட இந்த கூட்டணி எந்த அளவுக்கு மக்களுக்கு திருப்தி அளிக்கும்னு பொறுத்து இருந்து பார்ப்போம்.

நவம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆன ரஞ்சிதமே சாங் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கெடச்சிது, எல்லாரையும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தாங்க, இது ஒருபக்கம் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் மற்றும் மீம்ஸ் கிரேட்டர்ஸ் அந்த பாடல்களை ட்ரோல் பண்ணியும் வந்துட்டு இருக்காங்க, இந்த பாடல் விஜய் அவர்களோட வாய்ஸ்-ல ரொம்ப அழகா பாடி இருந்தாரு, விஜய் அவர்கள் ஒருபக்கம் இருந்தாலும் மானசியும் பாட்டோட முடிவுல எல்லாரும் எழுந்திருச்சி நின்னு ஆடுற மாரி கிராமத்து வாய்ஸ்ல ஒரு குத்து பாடலை பாடி இருப்பாங்க.

எப்படி பீஸ்ட் படத்துல அரபிக் குத்து பாடல் பூஜாவை விட ஜோனிட்ட காந்திக்கு இம்போர்ட்டண்ட் குடுத்த மாரி இந்த பாடல்லயும் மானசிக்கு இம்பார்டெண்ட கொடுத்து ரசிகர்கள் கொண்டாடிட்டு இருப்பாங்க.

இந்த படத்தில மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கு ஆன ஒரு பாடலை மட்டும் தான் பட குழு வெளியிட்டு இருக்காங்க, மீதி இருக்க 5 பாடல்களை அடுத்த மாதம் ரிலீஸ் பண்ணுவாங்களா இல்ல ஆடியோ லான்ச் அப்போ தான் ரிலீஸ் பண்ணுவாங்களானு பொறுத்து இருந்து பாப்போம்.

இந்த படத்துல சரத்குமார் மற்றும் குஷ்பூ, கணவன் மனைவியா நடிக்கறதா சொல்லப்படுது. ஆனால் இத பத்தின அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்னர் வாரிசு படத்தில் இருந்து ஒரு புகைபடம் வெளியாகின, அதில் விஜய் , ராஷ்மிகா மந்தனா மற்றும் குஷ்பூ போன்றோர் இடம் பெற்று இருந்தன. இதை வைத்து குஷ்பூ அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் வாரிசு படப்பிடிப்பின் பொது நீங்கள், ராஷ்மிக்க மந்தனா மற்றும் விஜய் செல்பி எடுத்து கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆதலால் வாரிசு படத்தின் போது உங்கள் அனுபவத்தை பற்றி கூறுங்கள் என கேட்டார்.

அதற்கு குஷ்பூ அவர்கள் நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை, யார் சொன்னது நான் நடித்தேன் என்று எதார்த்தமாக சந்தித்த பொது எடுத்துக்கொண்ட பொது புகைப்படம் என நழுவி கொண்டார், இதை பார்த்த வாரிசு பட ரசிகர்கள் கடுப்பாயின, சிலர் கமெண்ட்-ல் இது என்ன நடிப்புனு சொல்லி கலாய்த்தும் வந்தனர்.

பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால் இந்த திரைப்படம் அதை பூர்த்தி செய்யும் என விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் வெளியீட்டில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் வாரிசு திரைப்படம் வெளியாகும் பொங்கல் அன்று அஜிதின் துணிவு திரைப்படம் வெளியாக போவதாக தகவல் வெளியாயின.

விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது கடைசியாக ஜில்லா மற்றும் மங்காத்தாவில் மோதின இதில் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த பொங்கலின் மோதல் எந்த திரைப்படம் வெற்றி பெரும் என பொங்கலுக்கு வரை காத்திருப்போம்.

Leave a Reply

Latest Slideshows