தளபதிக்காக களமிறங்கிய சிம்பு ...அனல் பறக்கும் வாரிசு செகண்ட் சிங்கிள் "பெப்பி".!

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார். யூடியூபில் மட்டும் அந்த பாடல் ” 60 மில்லியன்” பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது.இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் அனிருத் குரலில் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், வாரிசு படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளாராம். அந்த பாடல் பெப்பியான பாடல் எனவும் தகவல்கள் வந்துள்ளது. விஜய் படத்திற்கு சிம்பு பாடுவது இதுவே முதன் முறை. தமன்இசையில் , சிம்பு பல பாடல்களை பாடியுள்ளார். விரைவில் சிம்பு வாரிசு படத்தில் பாடியுள்ள அந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனிருத் போலவே சிம்பு பாடியுள்ள பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் அவர் பாடிய புல்லட் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, அவர் வாரிசு படத்தில் பாடியுள்ளார் என்பதால் அந்த பாடலின் மீது இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

Leave a Reply

Latest Slideshows