சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் விதார்த்தின் 'லாந்தர்' திரைப்படம்

சாஜிசலீம் இயக்கத்தில், எம் சினிமா பத்ரி தயாரிப்பில் விதார்த் மற்றும் ஸ்வேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு ‘லாந்தர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விதார்த், ஸ்வேதா டோரத்தி, சஹானா கவுடா மற்றும் விபின் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள படம் ‘லாந்தர்’. இந்த படம் புதுமையான மற்றும் அற்புதமான சஸ்பென்ஸ் த்ரில்லர் புதிய கோணத்தில் உருவாகிறது. இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் ‘லாந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம் முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்களிலும், இயக்குநர் செல்ல அய்யாவுடன் கட்டா குஸ்தி, திரைப்படத்திலும் திரைப்படத்திலும் இணை மற்றும் உதவி இயக்குநராக பணியாற்றிய இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில் லாந்தர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி கோயம்பத்தூரியில் ஒருகட்டமாக நடைபெற உள்ளது. இந்த படம் பற்றி இயக்குநர் சாஜி சலீம் பேசுகையில், லாந்தர் படம் இதுவரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகவுள்ளது. இந்தப் புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. எனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

‘லாந்தர்’ திரைப்படத்திற்கு ஞானசெளந்தர் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரவீன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜெரோம் ஆலனும், சண்டைக் காட்சிகளை விக்கியும், கலை இயக்கத்தை தேவாவும் கையாள உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply