உலகிலேயே வினாடிக்கு 1.2 Terabit அதிவேக இணையதளத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

வினாடிக்கு 1.2 Terabit நெட்வொர்க்குடன் உலகின் அதிவேக இணையதளம் :

சீனா ஆனது ஏற்கனவே உள்ள முக்கிய வழித்தடங்களை விட 10 மடங்கு வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா தனது நெருங்கிய போட்டியாளர்களான அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை விட 10 மடங்கு வேகம் கொண்ட உலகின் முதல் அடுத்த தலைமுறை ஃபைபர் இணைய சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலக எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளது.

அதாவது 1.2 Terabit-Per-Second Network-க்குடன் உலகின் அதிவேக இணையத்தை சீனா ஆனது அறிமுகப்படுத்தி உள்ளது. உலகளாவிய தொழில்துறை காலக்கெடு கணிப்புகளை முறியடித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வேகமான அடுத்த தலைமுறை இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தனது சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று சீனா கூறுகிறது :

தற்போது வினாடிக்கு 1.2 டெராபிட்களை (1.2 Terabit) (ஒரு வினாடிக்கு 1200 ஜிகாபிட்களுக்கு மேல்) கடத்தும் உலகின் அதிவேக இணையம் தங்களிடம் இருப்பதாக சீனா கூருகிறது. இந்த நெட்வொர்க் ஆனது இதே வேகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 150 4K திரைப்படங்களை அனுப்பும். சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் Huawei Technologies Co ஆனது தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியலில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். சீன நாட்டின்  மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் China Mobile Ltd ஆகும்.

China Mobile Ltd மற்றும் Huawei Technologies Co ஆகியவை பெய்ஜிங்கை தெற்கே இணைக்கும் 3,000 கிலோமீட்டர் (1,860-மைல்) இணையதள நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளன. இது வடக்கில் பெய்ஜிங், மத்திய சீனாவின் வுஹான் மற்றும் குவாங்டாங்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள குவாங்ஜோ ஆகிய நகரங்களுக்கு இடையே ஒரு முக்கிய தரவு வழியை உருவாக்குவதால் “முதுகெலும்பு நெட்வொர்க்” என்று அழைக்கப்படுகிறது. 

இந்த நகரங்களுக்கு இடையே ஒரு வினாடிக்கு 1.2 Terabit (1,200 ஜிகாபிட்கள்) தரவுகளை அனுப்ப முடியும். இந்த சீனாவின் புதிய முதுகெலும்பு நெட்வொர்க் ஆனது 3,000 கிலோமீட்டர் ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங்கில் பரவி உள்ளது. அதாவது 3,000 கிலோமீட்டர் தொலைவில் அதிநவீன இணைய வலையமைப்பு ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் அரை மணி நேரத்திற்குள் Netflix இன் அனைத்து உலகளாவிய உள்ளடக்கத்தையும் அனுப்ப முடியும்.

2013 இல் தொடங்கப்பட் FITI திட்டத்தின் வெற்றி :

Beijing-Wuhan-Guangzhou இணைப்பு என்பது சீனாவின் எதிர்கால இணையத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் (FITI) ஒரு பகுதியாகும், இது 10 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு தேசிய சீனக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (செர்னெட்) சமீபத்திய பதிப்பாகும். FITI திட்டம், 2013 இல் தொடங்கப்பட்டு, அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு, கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு, மேலும் 40 பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்துகிறது. இது அமெரிக்கா மற்றும் ஜப்பானை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 3,000 கிமீ (1,860 மைல்கள்) ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங்கிற்கு மேல் உள்ள இந்த பாதை ஜூலையில் செயல்படுத்தப்பட்டு,  13/11/2023 திங்களன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு அனைத்து செயல்பாட்டு சோதனைகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக 13/11/2023 அன்று தொடங்கப்பட்ட இந்த சேவை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவை இந்த சாதனையின் பின்னணியில் உள்ள ஒத்துழைப்பு ஆகும்.

இந்த நெட்வொர்க் சீனாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் மட்டுமே செயல்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அமைப்பிற்கான கணினியின் அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகள் முதல் ஆப்டிகல் ஃபைபர் இணைப்புகள் வரை அனைத்திலும் தொழில்நுட்ப ஆராய்ச்சி குழு அடைந்துள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. இது இணைய தொழில்நுட்ப கூறுகளுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானை சீனா சார்ந்திருப்பதை குறைக்கிறது. முக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் தன்னிறைவை காட்டுகிறது. இது உலகளவில் காணப்படும் வழக்கமான இணைய வேகத்தை விட பல மடங்கு வேகமானது. தொழில்துறை 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சுரங்கங்கள் போன்ற பயன்பாடுகளிலிருந்து தரவு பரிமாற்றத்திற்கான வேகமாக வளர்ந்து வரும் தேவை ஆகும். சீனா ஆனது வினாடிக்கு 1 டெராபிட் அதிவேக நெட்வொர்க்குகள் உலகில் 2025 வரை வெளிவராது என்ற கணிப்புகளை முறியடித்தது.

Latest Slideshows

Leave a Reply