Kadukkai Benefits: கடுக்காய் பொடியின் 10 நன்மைகள்
நமது உடலில் பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஒரு அற்புத மூலிகை கடுக்காய் தலை முதல் கால் வரை ஏற்பட கூடிய எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவத்தில் மருந்துகளாக பயன்படுத்தி வரும் பல்வேறு லேகியங்கள், சூரணங்கள் மருந்து தயாரிப்புகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுவது இந்த கடுக்காய் அதற்கு காரணம் இதில் நிறைந்திருக்கும் மருத்துவ பண்புகளே ஆகும்.
கடுக்காயில் உள்ளிருக்கும் கொட்டை நச்சு தன்மை கொண்டதால் அதை நீக்கி விட்டு அதன் மேல் பகுதியை மட்டும் எடுத்து அரைத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். கடுக்காய் பொடியை கால் தேக்கரண்டி முதல் அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு குவளை சூடான நீரில் கலந்து மிதமான சூட்டில் இரவு உணவிற்கு பிறகு அருந்தி வருவது நல்லது. தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்காக தேன் கலந்தும் குடிக்கலாம்.
10 Kadukkai Benefits
- பொதுவாக துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகள் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றலும், இரத்தத்தை உற்பத்தி செய்யும் தன்மையும் கொண்டவை. கடுக்காய் பொடியை எடுத்துக்கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள கழிவுகள்,நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமடையும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி இரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
- மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக கடுக்காய் பொடி பயன்படுகிறது. கடுக்காய் பொடியை அரை தேக்கரண்டி அளவு இரவு உணவிற்கு பிறகு வெண்ணீரில் கலந்து அருந்தி வரும்போது நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும். மூல நோய் பாதிப்புகள் மற்றும் ஆசனவாய் எரிச்சல் போன்றவைகள் குறையும். இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் உள்ள கழுவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தை பலப்படுத்த செய்யும்.
- வாய்ப்புண், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மை கடுக்கைகளுக்கு உண்டு அல்சர் பிரட்சனை இருப்பவர்கள் கடுக்காய் பொடியை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் குணமாகும்.கடுக்காய் பொடியுடன் சீரகப் பொடியும் சேர்த்து சமஅளவு கலந்துக் கொண்டு காலை வெறும்வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து அருந்தி வரும்போது அல்சர் பாதிப்புகள், நெஞ்செரிச்சல் படிப் படியாக குணமடையும்.
- கடுக்காய் பொடியை மேற்குறியவாறு இரவு உணவிற்கு பின்பே எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும், இரத்த ஓட்டத்தை சீராக்கும், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கடுக்காய் நீரை அருந்தி வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதனால் இதய நோய் வருவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும்.
- உடலில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டிற்கு சிறந்தது கடுக்காய். கடுக்காய் பொடியை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு வலிமை தரும். நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கும். ஆண்மை குறைபாட்டை சரி செய்ய உதவும்.
- கண் பார்வை திறனை அதிகரிக்கும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. திரிபலா சூரணம் என்னும் மருந்து தயாரிப்பில் நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்று பொருளையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதை இரவு உணவிற்கு பிறகு ஒரு தேக்கரண்டி அளவு வெண்ணீரில் கலந்து அருந்தி வரலாம். இதன் மூலம் கண்பார்வை திறன் மேம்படும், இரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். சளி, இருமல், அல்சர், மலச்சிக்கள் போன்ற பாதிப்புகளையும் தீர்க்கும். புற்று நோய் வராமல் தடுக்கும், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தச்செய்யும்.
- கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது கடுக்காய் பொடி. கடுக்காய் பொடியை இரவு உணவிற்கு பிறகு எடுத்துக்கொண்டால் கருப்பையில் உள்ள கழிவுகளை நீக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, வெள்ளை படுதலை குணப்படுத்தும். கருப்பையில் கட்டிகள் ஏற்படுவதை தடுத்து கருப்பையை பலப்படுத்தச் செய்யும்.
- கடுக்காய் பொடி சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. கடுக்காய் பொடியை எடுத்துக்கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கும். சீறுநீரை பெருக்கி சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலை குணமாக்கும்.
- கடுக்காய் பொடியை எடுத்துக்கொண்டு வந்தால் கல்லீரலில் உள்ள நோய்கள் குறையும். கல்லீரலில் வீக்கம், கல்லீரல் கொழுப்பு, காமாலை போன்ற பாதிப்புகளை குறைத்து. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.
- பல் வலி, வாய் துறுநாற்றம், ஈரு வீக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது கடுக்காய். கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து காலை, இரவு வாய் கொப்பளித்து வந்தால் இந்த பிரட்சனைகள் படிப்படியாக குணமாகும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
மேற்கூறிய பல்வேறு நன்மைகளை அளிக்கும் இந்த கடுக்காய் பொடியை பொதுவாக ஓரிரு மாதங்கள் அல்லது ஒரு மண்டலம் எடுத்துக்கொண்டால் போதுமானது பிறகு மூன்று மாதங்கள் இடைவெளி விட்டு அல்லது தேவைப்படும்போது பயன்படுத்தி வரலாம்.