10 Lane Road To Reduce Heavy Traffic : கனரக வாகனங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 10 வழிச்சாலை

10 Lane Road To Reduce Heavy Traffic :

சென்னை மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு ஆனது புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமலே செல்லும் வகையில் ஒரு சுற்றுவட்டச் சாலையை அமைக்க அறிவித்திருந்தது. இந்த சாலை வசதியானது (10 Lane Road To Reduce Heavy Traffic) எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து தச்சூர் திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில், மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 133 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது (மாமல்லபுரத்தில் தொடங்கி எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில்).

இந்த 10 வழிச்சாலை மூலமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களும் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் கனரக வாகனங்களும் சென்னை நகருக்குள் செல்லாமல் எண்ணூர் துறைமுகத்தை அடைய முடியும். சென்னை புறநகர் பகுதியில் இந்தியாவில் மிகப்பெரிய கட்டமைப்பில் ஒன்றாக இந்த 10 வழிச்சாலை கட்டமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் - எண்ணூர் சுற்றுவட்டச் சாலை :

இந்த 10 வழிச்சாலை ஆனது சென்னை புறநகர் பகுதியில் வாகன நெரிசலை குறைப்பதற்காக வேகமாக (10 Lane Road To Reduce Heavy Traffic) செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை ஆனது சுமார் 132 கி.மீ தூரமும் 196 அடி அகலமும் கொண்டிருக்கும். இந்த சாலை அமைக்கும் பணியை மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்த சாலை திட்டத்திற்காக சுமார் 12,361 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.2673 கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டமானது வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம் :

மாநில நெடுஞ்சாலைத் துறை ஆனது சுற்றுவட்டச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 803 ஹெக்டர் நிலம் ஆனது கையகப்படுத்தப்பட உள்ளது. அந்தந்த பகுதிகளில் இந்த சாலை திட்டத்திற்காக தேவைக்கு ஏற்றவாறு, படிப்படியாக நிலம் ஆனது கையகப்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சாலை திட்டத்திற்காக (10 Lane Road To Reduce Heavy Traffic) நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடரும் அதேநேரத்தில், படிப்படியாக சாலை கட்டமைப்பு பணிகள் ஆனது மேற்கொள்ளப்பட உள்ளன.

ரூ.12,301 கோடி திட்டம் :

இந்த 10 வழிச்சாலை திட்டமானது 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் அமைகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய – மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு நிறுவன நிதியும் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியும் பெறப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Reply