100 New BS6 Buses In Tamil Nadu : பேருந்துகள் இயக்கத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

100 New BS6 Buses In Tamil Nadu - 100 புதிய ரூ.37.98 கோடி மதிப்பிலான BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை ஆனது காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில், ரூபாய் 634.99 கோடி மதிப்பில் 1666 BS6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 100 புதிய ரூ.37.98 கோடி மதிப்பிலான BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை 20.01.2024 இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி (100 New BS6 Buses In Tamil Nadu) வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையான பல்லவன் இல்லத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து 100 பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,666 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, குளிர்சாதனம் இல்லாத BS6 ரக டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக 100 BS6 ரக பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கி (100 New BS6 Buses In Tamil Nadu) உள்ளது.

  • விழுப்புரம் போக்குவரத்து கழகம் – 40 பேருந்துகள்
  • கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் – 40 பேருந்துகள்
  • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் -10 பேருந்துகள்
  • திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் – 5 பேருந்துகள்
  • மதுரை அரசு போக்குவரத்து கழகம் –  5 பேருந்துகள்

என மொத்தம் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் எஞ்சியுள்ள பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இன்று இயங்கத் தொடங்கியுள்ள 100 புதிய BS6 ரக பேருந்துகளில் பேருந்துகளை (100 New BS6 Buses In Tamil Nadu) முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகள் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் உள்ளன. தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குறைந்த கட்டணத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக தமிழக அரசு ஆனது வழங்கி வருகின்றது. மேலும் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை தமிழக அரசு ஆனது அளித்து வருகின்றது.

தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள்

  • “விடியல் பயணம்” திட்டம் – மகளிர் கட்டணமில்லாமல் சாதாரண நகர கட்டண பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்காக “விடியல் பயணம்” திட்டம்.
  • திருநங்கைகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை
  • புதிய பேருந்து வழித்தடங்களை பொதுமக்களின் தேவைக்கேற்ப தொடங்கி வைத்தல்
  • பழைய பேருந்துகளை புதுப்பித்தல்
  • புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல்
  • பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும் மற்றும் அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 16 புதிய பேருந்துகள் நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply