1000 Crore Club - மகத்தான வெற்றிக்கான கிளப்

உலக அரங்கில் இந்திய சினிமா ஆனது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. சமீப காலங்களில் சில குறிப்பிட்ட இந்திய திரைப்படங்கள் ஆனது பாக்ஸ் ஆபிஸ் வருவாயைப் பொறுத்தவரை ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் அள்ளி வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரூ.100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி, ரூ.500 கோடி வசூலைக் கூட இந்திய திரைப்படங்கள் எளிதாக கடக்கின்றன. எனவே ரூ.1000 கோடி வசூல் என்பதே தற்போது புதிய மைல்கல்லாக கருதப்படுகின்றது.

சினிமா உலகில் அதன் சர்வதேச சகாக்களுடன் போட்டியிட்டு 1000 கோடிகளுக்கு மேல் 7 இந்திய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து வெற்றியை பெற்ற அந்த திரைப்படங்களின் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் ‘1000 கோடி கிளப்பில்’ (1000 Crore Club) சேர்ந்துள்ளனர். இது அந்த நடிகர்களின் மகத்தான வெற்றிக்கான சான்றாகும். மேலும் இது தொழில்துறையில் அந்த நடிகர்களின் நிலைகளை உறுதிப்படுத்தி, அந்த நடிகர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துகிறது.

'1000 Crore Club-ல்' இடம்பிடித்துள்ள பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள்

1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இந்தியாவின் 7 பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்கள் பற்றிய தகவல்கள் இதோ.

  1. நடிகர் பிரபாஸ் – எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 2 ஆனது ரூ.1800 கோடி வசூலித்து இந்திய சினிமாவிற்கு புதிய சாதனை,  புதிய வரையறைகளை அமைத்தது மற்றும் அது ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியது. நடிகர் பிரபாஸ் அவர்கள் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடித்து கடந்த மாதம் வெளியான கல்கி 2898 AD படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி இதுவரை உலகளவில் ரூ.1100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த கல்கி 2898 AD படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருவதால் இந்த ரூ.1100 கோடி வசூல் ஆனது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  2. நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் – கல்கி 2898 AD படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரூ.1000 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளனர்.

  3. நடிகர் அமீர்கான் – அமீர்கானின் நடிப்பில் வெளிவந்த Dangal படம் ஆனது உலகளவில் ரூ.2024 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை அதிக வசூல் செய்த படமாக இந்த படம் தான் உள்ளது.

  4. நடிகர் ஷாருக்கான் – ஷாருக்கானின் 2 படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படம் ரூ.1050 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ.1150 கோடி வசூல் செய்துள்ளது.

  5. நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் – உலகளவில் RRR அதன் பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றது மட்டுமல்லாமல் ரூ.1200 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

  6. நடிகர் யாஷ் – யாஷ் நடித்த கன்னட சினிமா KGF அத்தியாயம் 2 ஆனது ரூ.1200 கோடி வசூல் செய்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.  கன்னட நடிகர் யாஷும் ரூ.1000 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply