11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்

தமிழகத்தில் பத்திரப்பதிவுகள் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி வசூலாகி (11733 Crore Collection In Bond Registrations) இருப்பதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பத்திர பதிவுத்துறையானது தற்போது முற்றிலும் ஆன்லைன் மயமாகிவிட்டது.  ஒவ்வொரு வருடத்திற்கும் வருவாய் இலக்கு வைத்து பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது.

25000 கோடி இலக்கு

அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு (11733 Crore Collection In Bond Registrations) நிர்ணயித்து பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக பத்திரப்பதிவில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதுடன் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

கூடுதல் டோக்கன்கள்

சுபமுகூர்த்த தினங்களிலும் ஒரு சில விடுமுறை நாட்களிலும் பத்திரப்பதிவை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால் சார்பதிவாளர் அலுவலங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 2001 ஆம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உயர்த்தப்படாமல் இருந்த 20 பிரிவுகளுக்கான கட்டணம் கடந்த மே மாதம் இந்த கட்டணத்தை பத்திரப்பதிவு துறை உயர்த்தியது.

ரூ.1222 கோடி கூடுதல் வருவாய் (11733 Crore Collection In Bond Registrations)

மேலும் உறுதிமொழி முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.200 ஆக பதிவுத்துறை அதிகரித்தது. இதுமட்டுமல்லாமல் அடமான பத்திரம், பாதுகாப்பு பத்திரம், பவர் பத்திரம், ஒப்பந்த பத்திரம் என 20 பிரிவுகளின் முத்திரைத்தாள் கட்டணத்தை பதிவுத்துறை உயர்த்தியது. இதனால் பத்திர பதிவுத்துறைக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ.1222 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு சீராய்வு கூட்டம்

பத்திரப்பதிவு பணிகள் குறித்த  சீராய்வு கூட்டமானது பத்திர பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் திரு.பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய வருவாய்த்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 2024-ம் நிதி ஆண்டில் பத்திரப்பதிவுகள் வழியாக ரூ.11,733 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக (11733 Crore Collection In Bond Registrations) தெரிவித்தனர். மேலும் கடந்த 2023-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.10,511 கோடி ரூபாய் வசூலானது எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply