15 Guinness World Records In One Day : ஒரேநாளில் டேவிட் ரஷ் 15 கின்னஸ் சாதனைகள்

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகளை (15 Guinness World Records In One Day) குறைந்த நிமிடங்களில் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டேவிட் ரஷ் லண்டன், அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார். டேவிட் ரஷ் இதுவரை தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் செய்து அசத்தியுள்ளார்.

இவர் ‘சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ எனப் பெயர் பெற்றவர். இவர் தற்போது ஒரேநாளில் 15 சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் ரெக்கார்டில் சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது செய்துள்ள இந்த சாதனையையும் சேர்த்து டேவிட் ரஷ் 165 பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார். ஒவ்வொரு சாதனையாக செய்து வந்த இவருக்கு போரடித்து விட்டது போல் சமீபத்தில் திடீரென லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்திற்குச் சென்று, ஒரே நாளில் 15 உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

15 Guinness World Records In One Day - அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் ஒரேநாளில் செய்த 15 கின்னஸ் சாதனை விவரங்கள் :

  • ஜக்கிலிங் வித்தை – 3 பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிபோட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக முறை கடிப்பது ஜக்கிலிங் வித்தை ஆகும்.
  • டேவிட் ரஷ்  3 ஆப்பிள் பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிபோட்டு ஒரு நிமிடத்துக்குள் 198 முறை கடித்து உலக சாதனையை படைத்து இருக்கிறார்.
  • வெறும் 2.09 நிமிடங்களில் 2-வது சாதனையாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 பாட்டில் மூடிகளில் 10 முறை மாற்று கைகளை பயன்படுத்தி வேகமாக துள்ளச் செய்துள்ளார். டேவிட் ரஷ் இந்த சாதனையை மிகவும் நூதனமாக செய்து முடித்து அசத்தியுள்ளார்.
  • அதேபோல் 3-வது சாதனையாக டேவிட் ரஷ் 30 வினாடிகளில் கையின் பக்கங்களை பேஸ் பாலால் மாறி மாறி அடித்த சாதனையையும் முறியடித்துள்ளார். டேவிட் ரஷ் இவ்வாறு 125 முறை பந்தினை அடித்து அசத்தி உள்ளார்.
  • இதேபோன்று 4-வது சாதனையாக டேவிட் ரஷ் வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்து பிடித்தல்.
  • 5-வது சாதனையாக டேவிட் ரஷ் அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல்.
  • 6-வது சாதனையாக டேவிட் ரஷ் , 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல்.
  • 7-வது சாதனையாக டேவிட் ரஷ் 10 டாய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல்.
  • 8-வது சாதனையாக டேவிட் ரஷ், அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல்.
  • 9-வது சாதனையாக டேவிட் ரஷ், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடித்தல். ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை டேவிட் ரஷ் 64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • 10-வது சாதனையாக டேவிட் ரஷ், 30 வினாடிகளில் சுவரில் வீசி ஏறியப்பட்ட டேபிள் டென்னிஸ் பந்துகளை அதிக முறை வாயால் கவ்விப் பிடித்துள்ளார்.
  • 11-வது சாதனையாக டேவிட் ரஷ், ஒரு நிமிடத்தில் டேபிள் டென்னிஸ் பந்தை அதிக முறை சுவரில் அடித்து உலக சாதனையை படைத்துள்ளார்.
  • 12-வது சாதனையாக டேவிட் ரஷ், வெறும் 5.12 வினாடிகளில் காகித விமானத்தைச் செய்து பறக்கவிடும் சாதனையை செய்துள்ளார்.
  • 13-வது சாதனையாக டேவிட் ரஷ், ஒரு நிமிடத்தில் 29 முறை இலக்கை நோக்கி சாப்ஸ்டிக்குகளை எறிந்து சாதனை செய்துள்ளார்.

என 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் செய்து (15 Guinness World Records In One Day) முறியடித்து காட்டியுள்ளார். இவரது வாழ்நாள் இலக்கு ஆனது உலகில் உள்ளவர்களின் சாதனையை முறியடித்து அதிக சாதனைகள் புரிய வேண்டும் என்பதே ஆகும்.

Latest Slideshows

Leave a Reply