15000 Drones To Women Self-Help Groups - 15,000 மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும்

15,000 மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பெறும் ரூ.1,261 கோடி ட்ரோன் திட்டத்திற்கு (15000 Drones To Women Self-Help Groups) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது :

கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறனை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்துடன் 15,000 மகளிர் சுய உதவிக்குழுக்களின்  வாழ்வாதாரத்தை (15000 Drones To Women Self-Help Groups) மேம்படுத்துவதற்காகவும் பிரதமர்  நரேந்திர மோடி ரூ.1,261 கோடி ட்ரோன் திட்டத்தை அறிவித்தார். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதில் ட்ரோன்கள் ஆனது செயல்திறனை மேம்படுத்தும். விவசாயிகளின் நானோ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகளுக்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் விவசாயிகளுக்கு ட்ரோன் சேவைகளை வாடகைக்கு (15000 Drones To Women Self-Help Groups) விடுவார்கள்.

28/11/2023 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மத்திய துறை திட்டத்திற்கு முடிவு எடுக்கப்பட்டது. 29/11/2023 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், “தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்களை 2024-25 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை வாடகை சேவைகளால் மேம்படுத்துவதையும் மற்றும் விவசாயத்தில் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்துவதையும் இந்த திட்டம் (1,261 Crore Drone Project) நோக்கமாக கொண்டுள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்குவதற்காக :

1,261 Crore Drone Project : “விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் (15000 Drones To Women Self-Help Groups) வழங்குவதற்காக தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மொத்தம் 89 லட்சம் சுய உதவிக்குழுக்களில் இருந்து பெண் சுய உதவிக்குழுக்கள் அடையாளம் காணப்படும் என்று தாக்கூர் கூறினார். சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் விலையில் 80% அல்லது ரூ.8 லட்சம் வரை மத்திய அரசால் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை பெண்கள் கிளஸ்டர் லெவல் ஃபெடரேஷன் (CLFs.) SHGகளின் தேசிய விவசாய உள்கட்டமைப்பு நிதி வசதியின் (AIF) கீழ் கடனாக அளிக்கப்பட்டு 3% வட்டியை ஈர்க்கும்” என அமைச்சர் கூறினார்.

ட்ரோன் விமானிக்கு ரூ.15,000 மற்றும் துணை விமானிக்கு ரூ.10,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும். ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்காக, 10-15 கிராமங்கள் கொண்ட ஒரு கிளஸ்டர் ஆனது உருவாக்கப்பட்டு, சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் வரை ட்ரோன் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து 15,000 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் ஆனது அடையாளம் காணப்படும். SHG கிளஸ்டர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் ஒருவர் 15 நாள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அதில் 5 நாள் கட்டாய ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் விவசாய நோக்கத்திற்காக ஊட்டச்சத்து மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான கூடுதல் 10 நாள் பயிற்சி ஆனது அளிக்கப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்  (15000 Drones To Women Self-Help Groups) நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி போன்ற நானோ உரங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். எலெக்ட்ரிக்கல் பொருட்கள், பொருத்துதல் மற்றும் மெக்கானிக்கல் வேலைகளை சரிசெய்வதில் விருப்பம் உள்ள SHG இன் மற்ற/குடும்ப உறுப்பினர்கள் ட்ரோன் டெக்னீஷியன்/உதவியாளர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆளில்லா விமானங்களை வாங்குவதில் SHGகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவற்றின் பழுது மற்றும் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு, முன்னணி உர நிறுவனங்கள் (LFCs) ட்ரோன் சப்ளையர் நிறுவனங்கள் மற்றும் SHG களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும்.

2023-24 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் 15,000 சுய உதவிக்குழுக்களுக்கு நிலையான வணிகம், வாழ்வாதார ஆதரவும் மற்றும் அவர்களுக்கு ட்ரோன் வாடகை சேவையாக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம்  கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் ‘லக்பதி தீதி’ முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் ஆனது முக்கியமானது.

Latest Slideshows

Leave a Reply