17 Exoplanets : நாசா ஆய்வில் 17 புதிய எக்ஸோப்ளானெட்டுகள் (Exoplanets) கண்டறியப்பட்டுள்ளது

17 Exoplanets :

சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் உயிர்களை தேடும் நாசாவின் ஆய்வில் 17 எக்ஸோப்ளானெட்டுகள் (17 Exoplanets) கண்டறியப்பட்டுள்ளன. அவை தனது பனிக்கட்டி ஓடுகளின் கீழ் திரவ நீரைக் (Liquid Water) கொண்டிருக்கக்கூடும் என்றும் தண்ணீர் மேற்பரப்பு வழியாக உடைகிறது என்றும் நாசா கூறியுள்ளது. இந்த எக்ஸோப்ளானெட்டுகளில் (17 Exoplanets) உள்ள கீசர் செயல்பாட்டின் அளவையும் நாசா ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். இந்த வழிந்தோடும் வெடிப்புகளை தொலைநோக்கியின்  மூலம் கண்டறிந்தனர்.

இந்த புதிய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது ஏனெனில் அந்த கிரகங்களில் மேற்பரப்பானது கடலில் ஆற்றல் வழங்கல் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளில் பயன்படுத்தப்படும் கூறுகள் மற்றும் சேர்மங்கள் போன்ற பிற தேவைகள் இருந்தால் அங்கு சில உயிர்கள் இருக்க கூடும் மற்றும்  உயிர்கள் வளர்க்கக்கூடும் என்று நாசா கூறியுள்ளது. நாம் வாழும் கிரகத்தில் கூட கடலின் அடிப்பகுதியில் முழு இருளில் செழித்து வளரும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் உள்ளன. பல உயிரினங்கள் அங்குள்ள நீர்வெப்ப துவாரங்களிலிருந்து தங்களுக்கு தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் பெறுகின்றன.

நாசா ஆராய்ச்சியாளர்கள் 17 உறுதிப்படுத்தப்பட்ட எக்ஸோபிளானெட்டுகளின் நிலைகளை பரிசோதித்தனர். இவை அனைத்தும் பூமியின் அளவை போலவும் ஆனால் அடர்த்தி குறைவாகவும் உள்ளன. இவை அடர்த்தியான பாறைக்கு பதிலாக லேசானா அளவு பனி மற்றும் நீரைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. இருப்பினும் இந்த கிரகங்களின் சரியான கலவைகள் ஒரு மர்மமாகவே உள்ளன. ஆனால் மற்ற பல ஆய்வுகளிலிருந்து அவற்றின் மேற்பரப்பு வெப்பநிலையின் ஆரம்ப மதிப்பீடுகள் அவை நமது கிரகத்தை விட மிகவும் குளிராக இருப்பதாகக் கூறுகின்றன. இதற்கு பனியால் மூடப்பட்டிருக்கும் என்று அர்த்தம் என நாசா தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply