17 Loan Apps Play Store-ல் இருந்து Google அதிரடியாக நீக்கியுள்ளது

வெறும் 5 நிமிடங்களில் கடன் என்ற எளிமையான செயல்முறை போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கும் லோன் ஆப்களின் (17 Loan Apps) எண்ணிக்கை நாளுக்கு நாள் அத்திகித்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற ஆப்கள் எவ்வளவு ஆபத்தானவைகள் என்பதை நிரூபிக்கும்படி சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் ஒரு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மிகவும் எளிமையான முறையில் கடன் தருகிறோம் என்கிற பெயரில் டேட்டா திருட்டு (Data Harvesting) வேலைகளை பார்த்து வந்த 17 ஆண்ட்ராய்டு ஆப்களை (17 Loan Apps) கண்டறிந்த கூகுள் (Google) அவைகள் அனைத்தையுமே தனது பிளே ஸ்டோரில் (Play Store) இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

Google நிறுவனத்தால் நீக்கப்பட்ட 17 லோன் ஆப்களின் (17 Loan Apps) பெயர்கள் என்ன? இந்த ஆப்கள் பயனர்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது? நமது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட பிறகு இவைகள் என்னென்ன திருட்டு வேலைகளை செய்யும்? அதை வைத்து பயனர்களை என்னவெல்லாம் செய்ய சொல்லும்? இதோ அனைத்து விவரங்கள். பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் ஸ்பை லோன் (Spy Loan) என அழைக்கப்படும் இந்த ஆப்கள் மிகவும் நம்பகமான கடன் வழங்குநர்களை போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். பயனர்கள் இதை நம்பி இன்ஸ்டால் செய்த பிறகு அவர்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை அணுகுவதற்கான அனுமதிகளை தானாகவே பெற்றுக்கொள்கிறது.

இந்த ஆப்கள் காண்டாக்ட் லிஸ்ட் (Contact Lists) எஸ்எம்எஸ் மெசேஜ்கள் (SMS Messages) போட்டோக்கள் (Photos) மற்றும் உங்களுடைய ப்ரவுஸர் ஹிஸ்டரி (Browser History) உட்பட பல தரப்பட்ட தகவல்களை திருடும். மேலும் இந்த தரவுகளை வைத்து அதிக வட்டி விகிதங்களுடன் கடனை திருப்பி செலுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறது மற்றும் அச்சுறுத்துகிறது. Google பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு இந்த 17 ஆப்களும் 12 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களை பெற்றுள்ளது என்றும் இந்த ஆப்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான், கொலம்பியா, தாய்லாந்து, மெக்சிகோ, கென்யா, வியட்நாம், இந்தோனேசியா, எகிப்து, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

17 Loan Apps :

 1. ஏஏ க்ரெடிட் (AA Credit)
 2. அமோர் கேஷ் (Amor Cash)
 3. குயாபா கேஷ் (Guayaba Cash)
 4. ஈஸி கிரெடிட் (Easy Credit)
 5. கேஷ்வாவ் (Cash Wow)
 6. கிரெடிபஸ் (Credi Bus)
 7. பிளாஷ் லோன் (Flash Loan)
 8. பிரஸ்டமோஸ் கிரெடிட்டோ (Prestamos Credito)
 9. பிரஸ்டமோஸ் டி கிரெடிட்டோ-யுமிகாஷ் (Prestamos De Credito-Yumi Cash)
 10. கோ கிரெடிடோ (Go Credito)
 11. இன்ஸ்டன்டேனியோ பிரஸ்டமோ (Instantaneo Prestamo)
 12. கார்ட்டெரா கிராண்ட் (Cartera Grande)
 13. ரேப்பிடோ கிரெடிடோ (Rapido Credito)
 14. ஃபைன்அப் லெண்டிங் (Finupp Lending)
 15. 4எஸ் கேஷ் (4S Cash)
 16. ட்ரூ நைரா (TrueNaira)
 17. ஈஸி கேஷ் (EasyCash)

எந்தவொரு ஆப்பையும் பதிவிறக்கம் செய்வதற்கு முன் அந்த ஆப்பின் டெவலப்பர் விவரங்களை சரிபார்க்கவும். பொதுவாகவே நேர்மறையான ஆப்கள் நன்கு அறியப்பட்ட டெவலப்பர்களிடம் இருந்து தான் வரும். கடைசியாக மற்றும் முக்கியமாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) போன்ற அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களின் வழியாக மட்டுமே ஆப்களை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்யவும்.

Latest Slideshows

Leave a Reply