1st Private Bank Branch in Lakshadweep : லட்சத்தீவில் கிளை திறக்கும் முதல் தனியார் வங்கி HDFC

HDFC வங்கி ஆனது மும்பையை  தலைமையிடமாகக் கொண்ட, சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும். HDFC வங்கி $145 பில்லியன் சந்தை மூலதனத்துடன் (ஏப்ரல் 2024 வரை), இந்திய பங்குச் சந்தைகளில் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் தனியார் வங்கியான HDFC Bank  (1st Private Bank Branch in Lakshadweep) ஒரு branch-த் 10/04/2024  அன்று திறந்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் முன்னிலையில் உள்ள ஒரே தனியார் துறை வங்கி HDFC Bank ஆகும்.

லட்சத்தீவு ஆனது மாலத்தீவுடனான சர்ச்சையை அடுத்து  ஒரு சுற்றுலா தலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் லட்சத்தீவில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் லட்சத்தீவில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் HDFC Bank தனது கிளையை லட்சத்தீவில் திறந்துள்ளது. இந்த HDFC Bank branch ஆனது தனிப்பட்ட வங்கி மற்றும் டிஜிட்டல் பேங்கிங் தீர்வுகளை மையமாகக் கொண்டு பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதன் மூலம் லட்சத்தீவில் வங்கி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தக் கிளை ஆனது பிராந்தியத்தில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான QR அடிப்படையிலான பரிவர்த்தனைகள் உட்பட தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை கிளை வழங்கும்.

HDFC வங்கியின் சில்லறை கிளை வங்கி குழு : 1st Private Bank Branch in Lakshadweep

தலைவர்எஸ்.சம்பத்குமார், “வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு சேவை செய்ய HDFC Bank முயல்கிறது, மேலும் HDFC Bank ஆனது லட்சத்தீவில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் நிதித் தேவைகளுக்கு சேவை செய்வதை எதிர்நோக்குகிறது” என்று கூறினார். மூத்த கடற்படை அதிகாரி கேப்டன் லவ்கேஷ் தாக்கூர் மற்றும் உள்ளூர்வாசியான டாக்டர் கே.பி.முத்துக்கோயா ஆகியோர் HDFC வங்கியின் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தனர். HDFC வங்கியின் சில்லறை வணிகக் கிளையின் குழுத் தலைவர் எஸ்.சம்பத்குமார், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் கிளை வங்கித் தலைவர் திரு சஞ்சீவ் குமார் மற்றும் பிற உள்ளூர் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply