2 New Trains Through Madurai : விரைவில் மதுரை வழியே 2 புதிய ரயில்கள் இயக்கம் - தென்மாவட்ட மக்களின் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது

தென்மாவட்ட மக்களின் 2 புதிய ரயில்கள் (2 New Trains Through Madurai) கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட லோக்சபா உறுப்பினர்களுக்கான நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. மதுரை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

அதில் ஒரு ரயில் ஆனது தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாகவும் மற்றும் மற்றொரு ரயில் ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாகவும் இயக்கப்படும். மேலும் ஒரு இரவு நேர ரயில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் வாரம் இரு முறை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல ரயில்வே வாரியம் ஆனது ராமேஸ்வரத்திற்கும் மங்களூருக்கும் இடையே வாரம் ஒரு முறை ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

சு.வெங்கடேசன் எம்.பி உரை :

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தென்மாவட்ட மக்களுக்கும், மற்றும் மேற்கு மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய இந்த 2 புதிய ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. எனது மக்களின் நீண்ட நாள் கனவு ஆனது நிறைவேறி உள்ளது. இந்த ரயில்களின் இயக்கம் ஆனது தென்மாவட்ட மக்களுக்கும், மற்றும் மேற்கு மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியது ஆகும். ரயில்வே நிர்வாகத்திற்கு கோவை ரயில் பயணிகள் சங்கமும் மற்றும் மதுரை தூத்துக்குடி பகுதி மக்களும் இக்கோரிக்கையை பலமுறை வைத்திருந்தனர்.

இந்த இரு ரயில்களும் (2 New Trains Through Madurai) விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே வாரியம் தற்போது தெரிவித்துள்ளது. எனது மற்றும் எனது மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொடுத்த ரயில்வே வாரியத்திற்கும், மற்றும் பரிந்துரை செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போலவே இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திற்கும், மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் எனது கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply