2 TN Teachers For National Award : 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு மதுரை மற்றும் வேலூர் ஆசிரியர்கள் தேர்வு

செப்டம்பர் 5, 2024 அன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆசிரியர் R.கோபிநாத் மற்றும் R.S.முரளிதரன் ஆகியோருக்கு (2 TN Teachers For National Award) தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படும்.

2 TN Teachers For National Award :

ஆசிரியர் R.கோபிநாத் - ஒரு குறிப்பு :

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 42 வயதான ஆசிரியர் R.கோபிநாத் வேலூரில் உள்ள குடியாத்தத்தைச் சேர்ந்தவர். R.கோபிநாத் தெருவிளக்கு வெளிச்சத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதால் மக்கள் இவரை ‘தெருவிளக்கு’ கோபிநாத் என்று அழைக்கிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மகனான R.கோபிநாத் அறிவியல், கல்வி மற்றும் இலக்கியத்தில் தலா ஒன்று என மூன்று பட்டங்களைப் பெற்றுள்ளார். R.கோபிநாத் தனது தந்தையை உத்வேகமாக எடுத்துக் கொண்டு ஆசிரியர் பணியில் ஈடுபட்டு 19 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார்.

இவர் புதுமையான கற்பித்தல் முறையை பின்பற்றி வருகிறார். இவர் ராஜ ராஜ சோழன், ஔவையார், திருவள்ளுவர், சுப்ரமணிய பாரதியார் போன்ற வரலாற்று சிறப்பு மிக்கவர்களின் பாடங்களை சொல்லிக்கொடுக்கும் போது அவர்களின் ஆடைகளை உடுத்தி வேஷம் மற்றும் மேக்கப் போட்டுக் கொண்டு சொல்லிக்கொடுக்கிறார். தனது மாணவர்களின் வாழ்க்கைக்கு பாடங்களைக் கொண்டுவர, உள்ளடக்கிய மனப்பான்மையை வளர்க்க மற்றும் தனது மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தான் இந்த கற்பித்தல் முறையை பின்பற்றுவதாக R.கோபிநாத் கூறினார். இவர் பள்ளிச்  சீருடைகளை அணிகிறார். 

சீருடை அணிவது மாணவர்களுடன் ஒரு நெருக்கமான பிணைப்பை வளர்த்து, மாணவர்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது என்று கூறுகிறார். R.கோபிநாத் தனது மாணவர்களை நேரடி தொலைக்காட்சிகளில் பல்வேறு கலைகளை அறிமுகப்படுத்தும் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறார். தனது முயற்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் இந்த விருதை கருதும் R.கோபிநாத் பரிசுத் தொகையை குடியாத்தத்தில் தனது கிராமத்திற்கு அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளார். மேலும்  விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான தனது பணியைத் தொடர இருப்பதாகக் கூறுகிறார்.

ஆசிரியர் R.S.முரளிதரன் - ஒரு குறிப்பு :

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 60 வயதான R.S.முரளிதரன் மதுரையில் உள்ள டி.வி.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். BE மற்றும் MBA பட்டம் பெற்ற முரளிதரன் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய 1986 ஆம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வியில் வகுப்புகளைக் கையாண்டு, பலரின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளார்.

தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு மாநிலத்தின் சிறந்த ஆசிரியர் விருதை அவருக்கு வழங்கி அவரை அங்கீகரித்தது. இவர் 2014 ஆம் ஆண்டு NCERT விருதை பெற்றுள்ளார். இவர் தனது மாணவர்களை வடிவமைக்கும் பொறுப்பை முதல் நாளிலிருந்தே தானே ஏற்றுக்கொண்டு அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை பின்தொடர்கிறார் மற்றும் அவர்களுக்கு உளவியல் ரீதியாக வழிகாட்டுகிறார். அதனால் அவர்கள் வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும். அவரது முப்பத்தெட்டு ஆண்டுகால அர்ப்பணிப்பு, பேரார்வம் மற்றும் பச்சாதாபம் இறுதியாக பலனளித்து உள்ளது.

Latest Slideshows

Leave a Reply