2000 Rupees Note: 2000 ருபாய் நோட்டுகள் செல்லாது!
- செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2000 நோட்டுகள் இந்தியாவில் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு செல்லாது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் :
- 2000 ருபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
- விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது. மேலும் பொதுமக்கள் மே 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும்.
- பொதுமக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ருபாய் நோட்டுகளை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.
- ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும்.
பண மதிப்பிழப்பு வரலாறு :
- 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500,1000 ருபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
- அப்போது 2000 ருபாய் நோட்டுகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் ரூ. 2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்தது.
2016 நவம்பர் 8 :
- 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன.
2016 நவம்பர் 12 :
- பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் 2000 ருபாய் நோட்டுகள் அறிமுகமானது. எந்த வங்கிக்கு போனாலும் ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் 2000 ருபாய் தாளாகவே இருந்தன. அதனை சில்லறை மாற்றுவதே சிரமமாக இருந்தது.
- இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500,1000 ருபாய் நோட்டுகளே 68 சதவீதம் இருந்தன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி. அவற்றை புதிய 500,1000 ருபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் டைம் எடுக்கும் என்பதால் 2000 ருபாய் நோட்டுகள் அறிமுகமாகின.
2000 Rupees Note முடிந்த… கதை!
- 2016-2017 – நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அச்சடிப்பு.
- 2017-2018 – நிதியாண்டில் 11 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அச்சடிப்பு.
- 2018 -2019 – நிதியாண்டில் 4.6 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அச்சடிப்பு.
- மார்ச் 30 , 2018 வரை – 356 கோடி எண்ணிக்கையிலான ₹2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
- பிப்ரவரி 26 , 2021 வரை – 249 கோடி எண்ணிக்கையிலான ₹2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
- கடந்த இரு ஆண்டுகளாக அச்சடிப்பு முற்றிலும் நிறுத்தம்.
- கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் 100க்கும் மேற்பட்டோர் பணமதிப்பிழப்பால் உயிரிழப்பு.
- 2023 செப்டம்பர் 30 முதல் புழக்கம் நிறுத்தம் – ரிசர்வ் வங்கி.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அறிமுகமான 2000 ருபாய் நோட்டுகள் அடுத்த ஆறரை ஆண்டு காலத்தில் விடைபெற்றுள்ளன.