2023 Booker Prize : 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு | ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் வென்றார்

2023 Booker Prize - புக்கர் மற்றும் சர்வதேச புக்கர் பரிசின் வேறுபாடுகள் :

ஆண்டுதோறும் புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் புக்கர் பரிசு மற்றும் சர்வதேச புக்கர் பரிசு என இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புக்கர் பரிசு ஆனது  ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்  படைப்புக்கு வழங்கப்படுகிறது.  சர்வதேச புக்கர் பரிசு ஆனது ஒரு படைப்பு ஆனது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு வழங்கப்படுகிறது. புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “புக்கர் பரிசு ஆனது பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது மற்றும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மொழிபெயர்ப்பாளர்களின் வேலைகளை அங்கீகரிப்பதை நோக்கமாக  கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நடுவர் குழுவினரால் முதலில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும் ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்படும். ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் இந்த நீண்ட பட்டியல் அறிவிக்கப்படும். அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் பின்னர் செப்டம்பரில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். £50,000 பரிசுத் தொகை புக்கர் பரிசு வெற்றியாளருக்கு வழங்கப்படும். ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் (Paul Lynch) 2023 ஆம் ஆண்டுக்கான (2023 Booker Prize) புக்கர் பரிசை பெற்றுள்ளார்.

2023 Booker Prize : Prophet Song (தீர்க்கதரிசியின் பாடல்) என்ற அவருடைய நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில், நடைபெற்ற நிகழ்ச்சில் புக்கர் விருதுடன் பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்ட்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 லட்சம்) பால் லிஞ்சுக்கு (2023 Booker Prize) வழங்கப்பட்டது. தேர்வுக் குழுவினர், “அயர்லாந்தில்  சர்வாதிகாரம் மற்றும் போரில் சிக்கிக் குலைந்த தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றிய ஆன்மாவை உலுக்குகிற நாவல் இது” என Prophet Song (தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவல் குறித்து தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply