2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2024-25 ஆம் நிதியாண்டில் குறைவாகவே இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. அதாவது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது (2024-25 GDP Growth Down) கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.4 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சி

உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலங்களில் பல நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி சரிந்த போதும், இந்தியாவின் ஜிடிபி மோசமான நிலைக்கு செல்லவில்லை. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு முடிந்த பிறகு இந்தியாவின்  பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது தொடர்பான (2024-25 GDP Growth Down) கணிப்புகளை தேசிய புள்ளியல் அலுவலகம் கணித்துள்ளது. இந்த கணிப்பில் நான்கு வருடங்களாக இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி குறையும் என கூறப்பட்டுள்ளது.

குறைந்து வரும் ஜிடிபி வளர்ச்சி (2024-25 GDP Growth Down)

2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்த நிலையில் இது 2024-25 நிதியாண்டில் அது 6.4 சதவீதமாக குறைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ‘மிதமான வேகத்தில்’ வளர்ந்து வருவதை (2024-25 GDP Growth Down) காட்டுகிறது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதாரம் இந்தளவுக்கு மெதுவாக வளர்ச்சி அடைந்தது இல்லை என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023-24 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி (Provisional Estimate Of GDP) 8.2 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் நாமினல் ஜிடிபியின் வளர்ச்சி 9.7% விகிதத்தைக் கண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023-2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4 சதவீதமாக இருந்துள்ளது. ஜிடிபி வளர்ச்சி ஏற்கனவே 7.2 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி (Reserve Bank) தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் இதை 6.6 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி கணிப்பை வெளியிட்டது. இதை கணக்கீடாக வைத்தே தேசிய புள்ளியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சியை கணித்துள்ளது.

நம்பிக்கை

இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் முக்கிய பொதுத்துறைகளின் வளர்ச்சி நம்பிக்கை (2024-25 GDP Growth Down) தருவதாகவே இருப்பதாகவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் வளர்ச்சி 3.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், கட்டுமானத் துறை 8.6 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply