2024 Khel Ratna Award : 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது பட்டியலை விளையாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதை (Khel Ratna Award) வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது பட்டியலை தற்போது (2024 Khel Ratna Award) மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கேல் ரத்னா விருது (2024 Khel Ratna Award)

கேல் ரத்னா விருது (Khel Ratna Award) என்பது இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய (2024 Khel Ratna Award) விருதாகும். கடந்த மாதம் வெளியான கேல் ரத்னா விருது பரிந்துரை பட்டியலில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் குகேஷ் மற்றும் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதும், 32 பேருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனு பாக்கர்

ஹரியானவை சேர்ந்த 22 வயதான மனு பாக்கர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த இவருக்கு கேல் ரத்னா விருது (2024 Khel Ratna Award) அறிவிக்கப்பட்டுள்ளது.

குகேஷ்

தமிழகத்தை சேர்ந்த 18 வயதான குகேஷ் 2024 ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி வாகை சூடினார். இதன் மூலம் உலகில் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்த இவருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்பிரீத் சிங்

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. மேலும் ஜப்பான் ஒலிம்பிக் தொடரிலும் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி 2-வது முறையாக பதக்கம் வென்றது. இதற்கு உறுதுணையாக இருந்த ஹர்மன்பிரீத் சிங் அவருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் குமார்

கடந்த 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் T64 உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரவீன் குமாருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply