2024 Oscar Nomination List : ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியல் வெளியானது

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெறவுள்ளது. இதற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் (2024 Oscar Nomination List) வெளியிடப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ‘ஓபன்ஹெய்மர்’ மற்றும் ‘பார்பி’ உள்ளிட்ட படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை பிடித்துள்ளன.

ஆஸ்கர் விருதுகள் 2024 :

சினிமா துறையில் மிகப்பெரிய சாதனையாக ஆஸ்கர் விருதுகள் பார்க்கப்படுகின்றன. இந்த விருதுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட, பலர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும், The Elephant Whisperers ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தன. இந்த முறை இந்திய படங்கள் இறுதிக்கட்டத்திற்கு தேர்வாகாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே சமயம் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கனடா நாட்டின் “டு கில் எ டைகர்” என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இயக்குனர் நிஷா பஹுஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘ஓபன்ஹெய்மர்’ 13 பிரிவுகளில் ஆதிக்கம் :

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ படம்  சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நடிகை, சிறந்த துணை கதாபாத்திரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

2024 Oscar Nomination List :

கோல்டன் குளோப் விருதுகளை வென்ற திரைப்படங்கள் தான் தற்போது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் (2024 Oscar Nomination List) இடம்பெற்றுள்ளன. கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற 81-வது ‘கோல்டன் க்ளோப்’ விருதுகள் விழாவில் ஓபன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன், புவர் திங்ஸ், பார்பி, உள்ளிட்ட படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றன. கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், கிலியன் மர்பி, லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலிலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Latest Slideshows

Leave a Reply