2024 Oscar Winners : 96வது ஆஸ்கர் விருது விழாவின் வெற்றியாளர்கள்

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரத்தை (2024 Oscar Winners) தற்போது காணலாம். உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர் ஆகும். வருட வருடம் நடத்தப்படும் இந்த விருது விழாவில் உலகெங்கிலும் இருந்து சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கவுரவப்படுத்துவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் தான் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் 96வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரத்தை (2024 Oscar Winners) தற்போது காணலாம். 

2024 Oscar Winners :

* சிறந்த அனிமேஷன் குறும்படம் : சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜான் மற்றும் யோகாவின் இசையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட War Is Over என்கிற குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் : சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்காக தோஷியோ சுசுகி மற்றும் ஹயாய் மியாசாகி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். தி பாய் அண்ட் ஹெரான் திரைப்படம் வென்றுள்ளது.

* சிறந்த துணை நடிகர் : சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் பெற்றுள்ளார். ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகை : சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘டாவின் ஜாய் ராண்டால்ப்’ வென்றுள்ளார். ‘The Holdovers’ படத்தில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

* சிறந்த ஒரிஜினல் திரைக்கதை : ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ திரைப்படம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதை ஆர்தர் ஹராரி மாற்றும் ஐஸ்டின் ட்ரட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

* சிறந்த தழுவல் திரைப்படம் : ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்’ திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை பெற்றது. இந்த விருதை ஜெபர்சன் பெற்றுக்கொண்டார்.

* சிறந்த மேக்கப் : சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை நதியா ஸ்டாசே, ஜோஷ் வெஸ்டன், மார்க் கூலியர் ஆகியோர் வென்றனர். இந்த விருது புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக இவர்களுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை “புவர் திங்ஸ்” திரைப்படம் வென்றது. படத்துக்கான ஆடைகளை வடிவமைத்த ஹோலி வேடின்சன் விருது பெற்றார்.

* சிறந்த சர்வேதேச திரைப்படம் : சிறந்த சர்வதேச படத்துக்கான ஆஸ்கர் விருதை பிரித்தானிய திரைப்படமான The Zone of Interest வென்றுள்ளது. படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிலாசர் விருது பெற்றார்.

* சிறந்த இயக்குனர் : சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகர் : சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய, ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஹீரோவாக நடித்த சிலியன் முர்ஃபிக்கு விருது வழங்கப்பட்டது.

* சிறந்த ஒரிஜினல் பாடல் : சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது, பார்பி படத்தில் இடம்பெற்ற ‘What Was I Made For’ என்ற பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.

* சிறந்த ஒளிப்பதிவு : சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருது ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக, வேன் ஹொய்டிமா வென்றுள்ளார்.

* சிறந்த ஆவணப்படம் : சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 20 Days In Mariupol வென்றுள்ளது. மிச்லே மிஸ்னர், ரேனே அரான்சன், சேர்னோவ் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

* சிறந்த ஆவண குறும்படம் : சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “The Last Repair Shop” என்ற குறும்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த விருது கடந்த ஆண்டு இந்தியாவின் எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு கிடைத்தது.

* சிறந்த படத்தொகுப்பு : சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேம் பெற்றுள்ளார். ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக விருது வழங்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply