2024 Rich List By Hurun India : Hurun India வெளியிட்டுள்ள 2024 பணக்காரர் பட்டியல்

2024 Rich List By Hurun India :

ஹூரன் இந்தியா கடந்த சில வருடங்களாக இந்திய பணக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில்  கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆனது 29 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹூரன் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் குறித்த டாப் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சிவ் நாடார், சைரஸ் எஸ்.பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிருஷ்ணன் தாமணி ஆகியோர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். 21 வயதான இளம் பில்லியனராக ஜெப்டோ நிறுவனத்தின் கைவல்ய வோரா 2024 ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் (2024 Rich List By Hurun India) புதிதாக இணைந்துள்ளார். 2024 இந்திய பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் அனாஸ் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

ஜூலை 31-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2024 பணக்காரர் பட்டியலில் சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது :

  • கவுதம் அதானி ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹூரன் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2020-ம் ஆண்டு 4-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 2023-ம் ஆண்டு 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மின் உற்பத்தி, மின் விநியோகம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இயக்கி வரும் அதானி நிறுவனத்தின் சொத்து மதிப்பில் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அதானியின் சொத்து மதிப்பு ஆனது கடந்த ஒரு ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதானி நிறுவனம் ஹிண்டர்பர்க் அறிக்கையால் சரிவைச் சந்தித்தபோதும் அதன் பிறகு படிப்படியாக வளரத்தொடங்கியது. கடந்த ஒரு ஆண்டில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் அதானி துறைமுகம் பங்குகள் 98 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் அதானி பவர் பங்குகள் ஆனது 76 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
  • அதே நேரத்தில் முதல் இடத்தில் இருந்து வந்த அம்பானி ரூ.10.14 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பெட்ரோகெமிக்கல், எரிபொருள், சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு பிரிவில் முகேஷ் அம்பானி முன்னணியில் இருக்கிறார்.
  • HCL நிறுவனத்தின் சிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • சைரஸ் எஸ் பூனவல்லா ரூ.2.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார். கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து வெளியிட்டு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெயர் பெற்ற நிறுவனமாகும்.
  • சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி ரூ.2.49 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
  • குமாரமங்கலம் பிர்லா ரூ.2.35 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 6-வது இடத்தில் உள்ளார். கடந்த ஒரு ஆண்டில் பிர்லா நிறுவன சொத்து மதிப்பானது 87 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானியா ரூ.1.90 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 8-வது இடத்தில் உள்ளார்.
  • ஆசிம் பிரேம்ஜி குடும்பம் ஆனது 9-வது இடத்தில் உள்ளது.
  • பஜாஜ் குடும்பம் ஆனது 10-வது இடத்தில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply