2024 Stock Market Dominating Companies : 2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள்

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் BSE பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனங்களின் விவரத்தை தற்போது காணலாம்.

இந்திய பங்குச்சந்தையில் இந்த ஆண்டு வரலாறு காணாத ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சில நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை (2024 Stock Market Dominating Companies) பதிவு செய்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் BSE Sensex 17 சதவீத வருமானத்தை பதிவு செய்துள்ளது. BSE SmallCap இன்டெக்ஸ் 39 சதவீதம் உயர்ந்துள்ளது. BSE சென்செக்ஸ்-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 91,000 சதவீத லாபத்தை பதிவு செய்துள்ளன. 2024-ல் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனங்களை பற்றி காணலாம். ACE Equity நிறுவனத்தின் தரவுகளின்படி 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1 லட்சம் முதலீடு செய்தன. இறுதியில் நிறுவனங்களின் மதிப்பு ரூ.9 கோடி வரை உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள் (2024 Stock Market Dominating Companies)

ஸ்ரீஆதிகரி பிரதர்ஸ் டெலிவிசன் நெட்வொர்க் என்ற ஒரு பிரபலமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 91,16% லாபத்தை (2024 Stock Market Dominating Companies) பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சந்தை மூலதனம் ரூ.8 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.5465 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஓராண்டில் ரூ.2.4-ல் இருந்து ரூ.2153 ஆக உயர்ந்துள்ளது.

எலக்ட்ரிக்கல் சாதனங்கள் தயாரிப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மார்சன்ஸ் நிறுவனம் 2,763% சதவீத லாபத்தை பதிவு செய்துள்ளது. பங்கு விலை ரூ.8.4-ல் இருந்து ரூ.241 ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4148 கோடியாக அதிகரித்துள்ளது.

பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் 2,441 சதவீத வருமானத்தை (2024 Stock Market Dominating Companies) பதிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.42.2-ல் இருந்து ரூ.1073 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.10870 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. Eraaya Life Spaces நிறுவனம் 1,935% ரிட்டன் உடன் பங்கின் விலை ரூ.8.8-ல் இருந்து ரூ.179.5 ஆக உயர்ந்துள்ளது. சந்தை மூலதனம் ரூ.3393 கோடியாக உயர்ந்துள்ளது.

கல்வித்துறை நிறுவனமான Vantage Knowledge Academy 1,823% வருமானத்தை பதிவு செய்துள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.11.6-ல் இருந்து ரூ.222.9 ஆக உயர்ந்துள்ளது.

நிதித்துறை NBFC பிரிவில் Ashika Credit Capital நிறுவனம் 1,675% வருமானத்தை (2024 Stock Market Dominating Companies) பதிவு செய்துள்ளது. பங்கு விலை ரூ.48.4-ல் இருந்து 859.1 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2164 கோடியாக அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply