2025-26 Budget Presented In Parliament : 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

மக்கள் மிகவும் எதிர்பார்த்த 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் (2025-26 Budget Presented In Parliament) செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகள், திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் (2025-26 Budget Presented In Parliament)

பாதுகாப்புத் துறை

நாடாளமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2025-26-ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.681210 கோடி நிதி ஒதுக்கீடு (2025-26 Budget Presented In Parliament) செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்களின் பென்ஷனுக்காக ரூ.160795 கோடியும், புதிய விமானங்கள், விமான இன்ஜின்கள் வாங்குவதற்கு ரூ.73004 கோடியும், இதர கருவிகள் வாங்குவதற்கு ரூ.63099 கோடியும் செலவிடப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை

இந்த 2025-26-ம் நிதியாண்டிற்கான சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.287000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் ரூ.208000 கோடியை விட 2.41 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் NHAI-யின் கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக இருந்தது எனவும், இது 3-வது காலாண்டு முடிவில் ரூ.2.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் கடனை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குடிநீர் சுகாதாரம்

இந்த 2025-26-ம் நிதியாண்டிற்கான ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.67000 கோடி நிதி ஒதுக்கீடு (2025-26 Budget Presented In Parliament) செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜல் ஜீவன் திட்டம் மூலம் புதிதாக 15 ஆயிரம் கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் வரும் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

2025-26 Budget Presented In Parliament - Platform Tamil

இந்த 2025-26-ம் நிதியாண்டிற்கான பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26889 கோடி நிதி (2025-26 Budget Presented In Parliament) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் குழந்தைகள், சிறுமிகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்து அவர்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும் கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துக்காக ரூ.21960 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இரயில்வே துறை

இந்த 2025-26-ம் நிதியாண்டில் இரயில்வே துறைக்கு கடந்​தாண்​டைப் போலவே ரூ.255000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இரயில்வே விரிவாக்க திட்​டங்கள் பரவலாக்​கப்​பட்டு வரும் நிலை​யில் இந்த நிதி மிக (2025-26 Budget Presented In Parliament) குறைவானது என்றும், அதன் வளர்ச்சி இலக்​குகளை சந்திப்​ப​தில் சவால்களை எதிர்​கொள்ள நேரிடும் என்றும் இத்துறையைச் சேர்ந்​த வல்லுநர்கள் கருத்து தெரி​வித்​துள்ளனர். பாது​காப்பு மற்றும் மின்​மய​மாக்​கலில் இரயில்வே துறை அதிக கவனம் செலுத்தி வரும் நிலை​யில் இரயில்​வேக்கான நிதி ஒதுக்​கீடு கடந்​தாண்​டைப் போலவே மாறாமல் இருப்பதால் விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​ வருகிறது.

கல்வித் துறை

இந்த 2025-26-ம் மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.128000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உயர்கல்வி துறைக்கு ரூ.50067 கோடியும், பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78572 கோடியும் (2025-26 Budget Presented In Parliament) ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியில் செயற்கை நுண்​ணறிவை பயன்​படுத்து​வதற்கு புதிய சீர்​மிகு மையம் ரூ.500 கோடி​யில் அமைக்​கப்​பட​வுள்​ளது. மேலும் அரசு மேல்​நிலைப்​பள்​ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு வழங்​கப்​பட​வுள்​ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 50000 அடல் டிங்​கரிங் கூடங்கள் உருவாக்​கப்​படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி துறை

இந்த 2025-26-ம் மத்திய பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.13611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் பட்டியலின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகைக்கு ரூ.212 கோடியும், பட்டியலின (2025-26 Budget Presented In Parliament) மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.110 கோடியும், பட்டியலின மாணவ, மாணவியரின் வெளிநாட்டு கல்வி உதவித் தொகைக்கு ரூ.130 கோடியும், ஓபிசி மற்றும் இபிசி பிரிவு மாணவர்களின் கல்வி  திட்டங்களுக்கு ரூ.250 கோடியும் செலவிடப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply