2025 New Year Celebration & History : 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் & வரலாறும்

டிசம்பர் 31-ம் தேதி கடிகாரத்தில் இரவு 12 மணியை தொடும்போது உலகம் முழுவதும் புதிதாகத் தொடங்கும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை பெறுவார்கள். மேலும் தங்களின் வாழ்வில் பல புதிய விஷயங்களை முயற்சி செய்வது பற்றி சிந்திப்பார்கள். ஆனால் ஜனவரி 1-ம் தேதியை ஏன் ஒரு வருடத்தின் தொடக்கமாக கருதுகிறோம் என்பதை பற்றியும், இந்த புத்தாண்டு (2025 New Year Celebration & History) தீர்மானங்களின் மரபுகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 1 ஏன் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது?

வரலாற்றில் முதல்முறையாக ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது கி.மு. 45-ல் தான். ரோமானியர்களின் பிரபல மன்னரான ஜூலியஸ் சீசர் நாட்காட்டியில் முதல் மாதத்தை ரோமானியர்களுக்கு மிகவும் பிடித்த ஜானஸ் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஆணையிட்டார். இதன் காரணமாகத்தான் நாட்காட்டியில் ஜனவரி மாதம் முதல் மாதமாக சேர்க்கப்பட்டு அன்று முதல் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டின் (2025 New Year Celebration & History) அடையாளமாக மாறியது. மேலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது இருந்த 13-ம் போப் கிரிகோரி ஜனவரி 1-ம் தேதியை ஆண்டின் தொடக்கமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் கிறிஸ்தவ உலகம் ஏற்றுக்கொண்டது.

2025 புத்தாண்டு முதலில் எந்த நாட்டில் கொண்டாடப்படுகிறது?

இந்திய நேரப்படி 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு முதலில் ஓசியானியா நாட்டில் தான் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தீவு நாடுகளான சமோவா, டோங்கா, கிரிபதியில் புத்தாண்டு கொண்டப்படுகிறது. இதன் பிறகு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டப்படுகிறது. பின்னர் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளான, இந்தியா, சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பங்காளதேஷ், தைவான் போன்ற நாடுகள் புத்தாண்டு கொண்டாடுகிறது.

இந்தியாவில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள்

இந்தியாவில் கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றி ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு (2025 New Year Celebration & History) தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த நாளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சுற்றுலா தளங்கள், புனித தளங்கள், ஆன்மிக தளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

புத்தாண்டின் முக்கியத்துவம் (2025 New Year Celebration & History)

புத்தாண்டு புதிய தொடக்கங்கள் மற்றும் கடந்த ஆண்டை பிரதிபலிக்கும் வாய்ப்பை குறிக்கிறது. அதேநேரத்தில் பலரின் கடந்த கால தவறுகளை விட்டுவிடவும், இந்த ஆண்டிற்கான இலக்குகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடங்குவதற்கான (2025 New Year Celebration & History) வாய்ப்பை வழங்குகிறது. மேலும் புத்தாண்டு குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடன் மக்களை ஒன்றிணைக்கிறது. மேலும் புத்தாண்டின் தொடக்கம்  ஒற்றுமை உணர்வு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பண்புகளை வளர்க்கிறது.

புத்தாண்டின் மரபுகள்

உலகம் முழுவதும் புத்தாண்டு மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் வேறுபடுகின்றன. பெரும்பாலானவர்கள் புத்தாண்டு தினத்தன்று நல்ல அதிர்ஷ்டம் போன்ற நல்ல வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் புத்தாண்டை வரவேற்பதற்கும், எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதற்கும் பட்டாசுகளை (2025 New Year Celebration & History) வெடிக்கின்றனர். இன்னும் சிலர் புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, பணத்தை சேமிப்பது, சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல் போன்ற உறுதிமொழிகளை தங்களுக்குள் எடுக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply