2025 Year Festival Celebration & Holidays : 2025 ஆம் ஆண்டிற்கான பண்டிகைகள் & விடுமுறை

தமிழக அரசு 2025-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை மற்றும் பண்டிகை விழாக்களை குறித்த அறிவிப்புகளை (2025 Year Festival Celebration & Holidays) வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு சனி மற்றும் ஞாயிறு தவிர்த்து மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு, தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இதனால் விடுமுறை அதிகமாக இருக்கும் என்று மக்கள் ஏற்கனவே உற்சாகமாக உள்ளனர். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு தவிர மற்ற விடுமுறை நாட்கள் குறித்த தகவல்களை தற்போது காணலாம்.

2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு (2025 Year Festival Celebration & Holidays) தற்போது வெளியாகியுள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும், சனி, ஞாயிறு தவிர இந்த 24 நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி இனி வர இருக்கும் 2025 ஆம் ஆண்டில் எந்தெந்த மாதத்தில் விடுமுறை நாட்கள் வருகிறது என்பதை தற்போது காணலாம்.

2025 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் (2025 Year Festival Celebration & Holidays)

ஜனவரி மாதம் (January)

ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு / New Year

ஜனவரி 14 – தைப்பொங்கல் / Thai Pongal

ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம் / Thiruvalluvar Day

ஜனவரி 16 – உழவர் திருநாள் / Uzhavar Thirunal

ஜனவரி 26 – குடியரசு தினம் / Republic Day

பிப்ரவரி மாதம் (February)

பிப்ரவரி 11 – தைப்பூசம் / Thaipusam

மார்ச் மாதம் (March)

மார்ச் 30 – தெலுங்கு வருட பிறப்பு / Telugu New Year 

மார்ச் 31 – ரம்ஜான் / Ramzan Festival

ஏப்ரல் மாதம் (April)

ஏப்ரல் 10 – மகாவீரர் ஜெயந்தி / Mahavir Jayanthi

ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி / Ambedkar Jayanthi

ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு / Tamil New Year

ஏப்ரல் 18 – புனித வெள்ளி / Good Friday

மே மாதம் (May)

மே 1 – உழைப்பாளர் தினம் /Labor Day

ஜூன் மாதம் (June)

ஜூன் 7 – பக்ரீத் பண்டிகை / Bakrid Festival

ஜூலை மாதம் (July)

ஜூலை 6 – மொஹரம் பண்டிகை / Muharram Festival

ஆகஸ்ட் மாதம் (August)

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் / Independence Day

ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி / Krishna Jayanthi

ஆகஸ்ட் 27 – விநாயகர் சதூர்த்தி / Ganesha Chaturthi

செப்டம்பர் மாதம் (September)

செப்டம்பர் 5 – மிலாடி நபி / Milad un-Nabi

அக்டோபர் மாதம் (October)

அக்டோபர் 1 – ஆயுத பூஜை / Ayudha Pooja

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி / Gandhi Jayanthi

அக்டோபர் 2 – விஜய தசமி / Vijaya Dashami

அக்டோபர் 20 – தீபாவளி / Diwali

டிசம்பர் மாதம் (December)

டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் / Christmas

Latest Slideshows

Leave a Reply